Advertisment

ஜவான் விழாவில் நடிகர் விஜய் பற்றி அட்லீ பேசியதை ஒளிபரப்பு செய்யாதது ஏன்? சன் டி.வி விளக்கம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய் பற்றி பேசியதை நீக்கிவிட்டு ஒளிபரப்பியது குறித்து சன் டிவி விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Atlee, Atlee speech, Atlee speech trimmed, Jawan Audio Launch, Sun Tv, Thalapathy vijay, Vijay,kalanithi maran, அட்லீ, அட்லீ பேச்சு, கலாநிதி மாறன், சன் டிவி, ஜவான், ஜவான் ஆடியோ லாஞ்ச், ஜவான் இசை வெளியீட்டு விழா, தளபதி விஜய், விஜய், Sun TV explains to Vijay Fans angry, edited speech of Atlee about Vijay in Jawan audio launch

அட்லீ

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய் பற்றி பேசியதை நீக்கிவிட்டு ஒளிபரப்பியது குறித்து சன் டிவி விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம், பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைத்து வருகிறது.

-ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் கூறிய காக்கா - கழுகு கதையும், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசும்போது, ரஜினிதான் சூப்பார்ஸ்டார், அவரைப் போன்று 72 வயதிலும் ஹிட் கொடுத்துட்டு நீங்க சூப்பர்ஸ்டார் ஆக ஆசைப்படுங்க என கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினி சொன்ன காக்கா - கழுகு கதையும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் பேச்சும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியது.

ரஜினி சொன்ன காக்க கழுகு - கதை விஜய்யைக் குறிப்பிடுவதாக ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே சமூக ஊடகங்களில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜவான் இசை வெளியிட்டு விழாவில், இயகுனர் அட்லீ நடிகர் விஜய் குறித்து பேசியதை நீக்கிவிட்டு சன் டிவியில் ஒளிபரப்பியதாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வந்த நிலையில் சன் டிவி விளக்கம் அளித்துள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

ஜவான் இசை வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குனர் அட்லீ, ஜவான் படம் உருவாக என்னோட அண்ணன் என்னோட தளபதி தான் முக்கிய காரணம் என பேசி இருந்தார். அந்த விழாவில் அட்லீ விஜய்யை பற்றி பேசிய காட்சிகள் சோசியல் மீடியா எங்கும் வைரல் ஆனது.

இந்த நிலையில், ஜவான் பட இசை வெளியீட்டு விழா இன்று சன் டிவி-யில் ஒளிபரப்பானது. அப்போது இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய் பற்றி பேசியதை எடிட் செய்து ஒளிபரப்பியதால், கோபமடைந்த விஜய் ரசிகர்கள் சன் டிவி-யையும், கலாநிதி மாறனையும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தனர்.

இதனால், சன் டிவி, தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஜவான் ஆடியோ லாஞ்சை என்ஜாய் பண்ணீங்களா என்று கேட்டு பதிட்டதோடு, இந்த நிகழ்ச்சியைத் தயாரித்ததும் எடிட் செய்ததும் கோகுலம் மூவீஸ் என குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளது.

சன் டிவி தனது எக்ஸ் பக்கத்தில், “நீங்கள் ஜவான் ஆடியோ லாஞ்சை என்ஜாய் பண்ணீங்களா என குறிப்பிட்டு, அந்நிகழ்ச்சியை தயாரித்ததும் எடிட் செய்ததும் கோகுலம் மூவீஸ் என குறிப்பிட்டு உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை கக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். கோகுலம் மூவீஸ் நிறுவனம் ஜவான் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment