சன் டிவியின் பிரபல சீரியலில் நாயகி மாற்றம் : ஏன் தெரியுமா?

திவ்யாவுக்கு பதிலாக கல்யாண பரிசி சீரியலில் கோலோச்சி வரும் ஸ்ரீத்திகா ஷனீஷ் பாரதி ரோலில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Sun Tv Serial Maharasi Shreethika Shanish as Bharathi Tamil News : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரதான பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது சீரியல்கள் தான். புதுமையான நிகழ்ச்சிகளும், பல ரியாலிட்டி ஷோக்களும் வரிசைக் கட்டிக் கொண்டு ஒளிபரப்பாகி வந்தாலும், சீரியலுக்கு தனி இடத்தை ரசிகர்கள் தந்துள்ளனர். இதனால், ஒரே தொலைக்காட்சியில் சுமார் 15 சீரியல்கள் வரை ஒளிபரப்பாகி வருகிறது.

கதைக்களம், சீரியல் நட்சத்திரங்கள், விறுப்பான காட்சிகள் என பல காரணங்களால் சன் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் மகராசி சீரியல் ரசிகர்களில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சித்ரம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மகராசின் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. தற்போது வரை சுமார் 400 எபிசோடுகளை கடந்து, வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் மகராசி சீரியலில், அதிரடி திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மகராசி சீரியலின் நாயகியான பாரதி ரோலில் சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் நடித்து வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், திவ்யாவுக்கு பதிலாக கல்யாண பரிசி சீரியலில் கோலோச்சி வரும் ஸ்ரீத்திகா ஷனீஷ் பாரதி ரோலில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சீரியல் ஷீட்டிங் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக மீண்டும் ஷீட்டிங் பணிகளுக்கான ஆயத்தப் பணிகளை நாடகக் குழு ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், பாரதி ரோலில் நடித்து வந்த திவ்யா கொரோனா சூழலை கருத்தில் கொண்டு ஷீட்டிங்கிற்கு வர தயங்குவதாகவும், இதனால் அவருக்கு பதிலாக ஸ்ரீத்திகா ஷனீஷ் நடிக்க உள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, ஸ்ரீத்திகா ஷனீஷின் இன்ஸ்டாகிராம் பதிவு அமைந்துள்ளது.

ஸ்ரீத்திகா ஷனீஷ் மெட்டி ஒலி, முத்தாரம், கலசம், உரிமை, குலதெய்வம், என பல முன்னனி தொடர்களில் நடித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் மலர் ரோலில் நடித்ததால் தனக்கான ரசிகர்களை பலமடங்கு உயர்த்தினார் ஸ்ரீத்திகா ஷனீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv famous serial maharasi shreethika shanish as bharathi dhivya sridar

Next Story
க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்… பாரதி கண்ணம்மா நடிகை மேக்கப் இல்லாத வீடியோ!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express