/indian-express-tamil/media/media_files/G64o0QxhxOq0TXgbGPPj.jpg)
முக்கிய சீரியலுக்கு விடை கொடுக்கும் சன் டி.வி: ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியல் விரைவில் முடிவடைகிறது என்ற தகவலுக்கு சீரியல் குழு எதிர்பார்க்காத அளவில் ரசிகர்கள், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ரியாக்ஷன் செய்துள்ளனர்.
சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டவர் இல்லம் தொடர். ஏராளமான ரசிகர்களை ஈர்த்து சன் டிவியில் முக்கிய சீரியலாக இருந்து வந்த நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது 1200 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் பாண்டவர் இல்லம் முடிவுக்கு வர உள்ளதால் கிளைமாக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
பாண்டவர் இல்லம் சீரியல் முடிவடைய உள்ளது என்ற செய்திக்கு யாரும் எதிர்பாராத வகையில், ரசிகர்கள், நெட்டிசன்கள் ரியாக்ஷன் செய்துள்ளனர்.
ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், “கிளைமாக்ஸ்லயாவது தாத்தா வருவாரா?” என்று கேட்டுள்ளார்.
ஒரு நெட்டிசன், “சூப்பர் தொல்லை முடிஞ்சுது” எweன்று ஃபயர் விட்டுள்ளார். பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு இப்படி நெட்டிசன்கள் கலவையாக ரியாக்ஷன் செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.