New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/10-5.jpg)
கோபிக்கு யார் மீது காதல் என்பதும் கதையின் முக்கிய போக்கு.
sun tv serial: கோவிட் 19 தொற்று லாக்டவுன் காலத்தில் இருந்து கல்யாண வீடு சீரியல் சன் டிவியில் மறு ஒளிபரப்பாகி வருது. இதில் இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ என்று பன்முகம் காண்பித்து வருபவர் திருமுருகன். கல்யாண வீடு சீரியலில் கோபி கிருஷ்ணனாக நடிக்கும் இவர் மீது சூர்யா, ஸ்வேதா என்று இரு பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதில் சூர்யாவுக்கு சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் மேனேஜராக இருக்கும் ராஜாவுடன் கல்யாணம் நிச்சயம் ஆகிவிடுகிறது. இதை கோபி தயங்கி தயங்கி சூர்யா, பணம், நகை இதெல்லாம் பார்த்தவுடன் ஆள் மாறிடுச்சும்மா என்று அம்மாவிடம் சொல்கிறார். கோபி சூர்யாவை காதலித்து வருபவர்.
அப்போது கோபியின் அம்மா, அம்மம்மா, தங்கை மூவரும் என்ன கண்றாவி இது.. இங்கே வந்து கோபிதான் எனக்கு எல்லாம்.. அவர்தான் எனக்கு வேணும்னு சொல்லி பேசிட்டு, இப்போ பணத்தை பார்த்த உடனே மாறிட்டான்னு சொல்றே...ஒரு பொண்ணு மனசை ஒருத்தனுக்கும், உடம்பை ஒருத்தனுக்குமா கொடுப்பான்னு கத்தறாங்க. அப்போதுதான் கலா சிஸ்டர்ஸின் கலா சொல்றாங்க.. வேலையே இல்லாத கோபியை விட, ஐடி கம்பெனியில் மேனேஜராக வேலை பார்க்கும் அவன் மேல்னு நினைச்சு இருப்பான்னு சொல்றாங்க. இதைக் கேட்டுகிட்டு வேதனையோடு நிற்கிறார் கோபி.
சூர்யாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
கல்யாண வீடு | Mon - Thu | 8 PM
முழு வீடியோவிற்கு : https://t.co/NSJjw7VtPU#SunTV #KalyanaVeedu #KalyanaVeeduOnSunTV #SunTVThrowback pic.twitter.com/tRv9Fpl4SG— Sun TV (@SunTV) July 9, 2020
கல்யாண வீடு சீரியலில் கோபி மீது இரு பெண்கள் ஆசைப்படுவதும். ஆனால், கோபிக்கு யார் மீது காதல் என்பதும் கதையின் முக்கிய போக்கு.
பணம் கொட்டு தொழில்கள்.. அதுவும் வீட்டில் இருந்தப்படியே செய்யலாம்! என்னென்ன தெரியுமா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.