/tamil-ie/media/media_files/uploads/2019/09/Kalyana-Veedu-Serial.jpg)
கல்யாண வீடு சீரியல்
Kalyana Veedu Seiral: ’மெட்டி ஒலி’ என்ற சீரியல் மூலமாக தொலைக்காட்சி ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமானவர் இயக்குநர் திருமுருகன். சன் டிவி-யில் ஒளிபரப்பான இந்த சீரியலை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
இதற்கடுத்து, ’கார்த்திகை பெண்கள்’, ‘நாதஸ்வரம்’, ‘குலதெய்வம்’ உள்ளிட்ட சீரியல்களையும் இயக்கி, அவற்றை சன் டி.வி-யில் ஒளிபரப்பினார். தற்போது திருமுருகன் இயக்கத்தில், ‘கல்யாண வீடு’ எனும் சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், கடந்த மே 14, 15 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் ஒரு பெண் கதாபாத்திரமே கூலிப்படையை ஏவி, தன் தங்கையை கூட்டுப் பலாத்காரம் செய்யும் படி அமைந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் மையத்துக்கு (BCCC) பார்வையாளர்கள் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் சன் டிவிக்கும், திரு பிக்சர்ஸ்க்கும் பி.சி.சி.சி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.
இது தொடர்பாக, அவர்கள் கடந்த மாதம் விளக்கமளித்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் சொன்ன விளக்கத்தில் உடன்பாடு எட்டாத நிலையில், அதை ஏற்க மறுத்த பி.சி.சி.சி கல்யாண பரிசு சீரியலை ஒளிபரப்பிய சன் தொலைக்காட்சிக்கு, ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதோடு வரும் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ’கல்யாண வீடு’ சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்னர், ’கூட்டுப் பாலியல் வன்முறை போன்ற பெண்களைத் துன்புறுத்தும் காட்சிகளை ஒளிபரப்பியதால் சன் டிவி வருத்தம் தெரிவிக்கிறது’ என்று 30 விநாடி வீடியோ க்ளிப்பை சேர்த்து ஒளிபரப்புமாறு கவுன்சில் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.