கண்ணான கண்ணே அப்டேட்: யுவா- பிரீத்தி கல்யாணம் கன்ஃபார்ம்?

Sun TV Kannana Kanne serial marriage portion shooting starts photo goes viral: கண்ணான கண்ணே சீரியலின் திருமண சூட்டிங் தொடங்கிவிட்டது; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலின் கல்யாண சூட்டிங் தொடங்கிவிட்டதை தெரிவிக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் கண்ணான கண்ணே சீரியலுக்கு தனி இடம் உண்டு. இந்த சீரியலில் நிமிஷிகா, ராகுல் ரவி, பப்லு பிரித்விராஜ், நித்யா தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் அப்பாவின் பாசத்திற்கு ஏங்கும் மீரா, யுவாவை காதலித்து வருகிறார். ஆனால் தன் காதலை தன் தங்கை ப்ரீத்திக்காக விட்டுக் கொடுக்கிறார் மீரா. தற்போது ப்ரீத்தி மற்றும் யுவாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்போது திருமணத்திற்கான படபிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. அதை உறுதி செய்யும் வகையில் இணையத்தில் சில போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் பப்லு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பப்லு, திருமண விழாவில் மேடையில் நடனம் ஆடுவது போன்று உள்ளது. இதனால் ப்ரீத்தி மற்றும் யுவா திருமணத்தில் எண்டர்டெயின்மெண்ட்க்கு குறைவிருக்காது என்று தெரிகிறது. ரசிகர்கள் இந்த எபிஷோடுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv kannana kanne serial marriage portion shooting starts photo goes viral

Next Story
மீண்டு வந்த மௌனராகம் : எப்போ டெலிகாஸ்ட் தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express