/indian-express-tamil/media/media_files/OhdSBit18F07wTNK2kHE.jpg)
இணையத்தில் பரவி வரும் கயல் சீரியல் விபத்து காட்சி; ஒரு சீரியல் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிறார்களா?
சீரியலில் நடிப்பது அத்தனை எளிது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கயல் சீரியலின் விபத்து காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த சீரியலில் கயல் கேரக்டரில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. எழில் எனும் கதாபாத்திரத்தில் சஞ்சீவி கார்த்திக் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். தனி ஒருவளாக குடும்பத்தை தாங்கும் பெண்ணின் போராட்டங்களை கூறும் கதையாக கயல் சீரியல் உள்ளது. இந்த சீரியலில் நீண்ட முரண்பாடுகளுக்குப் பிறகு கயலும் எழிலும் காதலிக்கிறார்கள்.
இந்தநிலையில், கயல் விபத்தில் சிக்குவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்தக் காட்சி சீரியலில் நடிகைகள் எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஒரு நாள் மாலை எழிலும் கயலும் மீட் செய்கிறார்கள். அப்போது கயல் சாலையில் நடந்து வரும் போது, எழிலின் கண்ணெதிரே ஒரு கார் மோதி விபத்தில் சிக்குகிறார் கயல். தலையில் பலத்த அடியுடன் துடிக்கும் கயலை மருத்துவமனையில் சேர்க்கிறார் எழில். இந்த விபத்தை செய்தது வேறு யாருமில்லை, வேதவள்ளியின் அண்ணன்தான். கயலால் சிறை சென்ற கோபத்தில்தான் அவர் இப்படி செய்திருக்கிறார்.
இந்த காட்சிக்கான வீடியோவில் கார் ரெடியாக நிற்கிறது. அப்போது கயலுக்கு ஏதோ சிவப்பு நிறத்தில் யூஸ் அன்ட் ட்ரோ கப்பில் கொடுக்கிறார்கள். அதை கயல் வாயில் வைத்துக் கொள்கிறார். பின்னர் நிற்கும் காரில் கயல் விழுகிறார், உடனே வாயில் வைத்திருந்த ’ரத்தத்தை’ துப்புகிறார். இதையடுத்து அவருக்கு பின்னால் சீரியலில் கண்ணுக்கு தெரியாத ஒரு ரப்பர் போன்று ஆளை தூக்கும் பெல்ட் உள்ளது. அதன் உதவியுடன் காரில் மேல் தூக்கிவீசப்பட்டு சாலையில் தேய்த்துக் கொண்டு விழுகிறார். அப்போது கயலுக்கு சின்ன சின்ன அடிகள் விழுகிறது. ஆனால் அதனை தாங்கிக் கொண்டு கயலாக நடிக்கும் சைத்ரா நடிக்கிறார்.
இதற்காக சாலையில் குப்பைகள் போடப்பட்டு, கயலுக்கு காயம் போன்ற மேக்கப் போடப்படுகிறது. கயல் தரையில் இழுத்து செல்லப்பட்டு விழுந்ததுமே அங்கிருப்போர் தூக்க ஓடி வருகிறார்கள். ரோல், ஆக்ஷன் என சொல்கிறார்கள், அதற்கேற்ப கயல் சுய நினைவில்லாதது போல் நடிக்கிறார். இப்படியாகத்தான் கஷ்டப்பட்டு ஒரு சீனை எடுக்கிறார்கள்.
Serial it's Not a Joke Bro 👍❤️ pic.twitter.com/KZFK9zdfrb
— குருவியார் (@Kuruviyaaroffl) January 6, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.