சமீபமாக காலமாகவே, விஜய், ஜீ, கலர்ஸ் என அத்தனை தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. ஆனால் அதில் ஏதாவது ஒன்றிரண்டு சீரியல்கள் தான் ரசிகர்களை ஈர்க்கின்றன.
அந்த வகையில் சன் டிவியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்படும் கயல் சீரியல் மிகவும் குறுகிய காலத்திலேயே, டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து ரசிகர்களின் மக்களை வென்றுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலின் மூலம் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. அந்த நாடகத்தில் வில்லியாக இவரது நடிப்பு பலரை கவர்ந்தது. அதேபோல வெள்ளித்திரையில் நடித்து ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சஞ்சீவ். தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, தனக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசாவை காதலித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றின் மொழி சீரியலில் நடித்தார். அதுவும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கயல் சீரியல் மூலம் சஞ்சீவ் சன் டிவியில் எண்ட்ரி கொடுத்தார். இதில் கதையின் நாயகியாக யாரடி நீ மோகினி புகழ் சைத்ரா ரெட்டி, கயல் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்கள் இருவருமே மிகவும் பிரபலமானவர்கள் என்பதால் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படி அக்டோபர் 25-ஆம் தேதி, வெளியான இந்த சீரியல், வெளியான முதல் மாதத்திலேயே அத்தனை சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி 10.66 புள்ளிகளைப் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்தது. இது சீரியல் குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில், செவிலியராக இருக்கும் கயல், தந்தையை இழந்து வாடும் குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று நடத்தும் சீரியஸான பெண்ணாக வருகிறார். அவரின் தோழனாக எழில் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடிக்கிறார்.
கயல் சீரியலை இயக்குநர் பி.செல்வம் இயக்குகிறார். இவர் இதற்குமுன் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு தொடரை இயக்கியவர்.
கயலைத் தொடர்ந்து, சுந்தரி 9.97 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், வானத்தைப்போல 9.80 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“