/tamil-ie/media/media_files/uploads/2019/09/Kolangal-serial-Manjari.jpg)
Kolangal serial Manjari
Manjari Vinodhini: தமிழ் சீரியல் ரசிகர்கள் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்று கோலங்கள். நடிகை தேவயானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இதில் ஆனந்தி கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் தேவயானியின் தங்கையாக நடித்திருந்தவர் மஞ்சரி.
பார்ப்பதற்கு பூசினாற் போல இருந்த அவர், தன் இயல்பான நடிப்புக்காக பலரின் பாராட்டையும் பெற்றார். கோலங்கள் சீரியலில் நடிக்கும் போது நடிகையர் திலகம் சாவித்ரியைப் போல், அடிக்கடி முக பாவனையை மாற்றிக் கொண்டு நடிக்கிறீர்கள் என இயக்குநர் திருச்செல்வம் கூறியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பிறகு வேறெந்த சீரியல்களிலும் நடிக்காத மஞ்சரியை சீரியல் ரசிகர்களே மறந்துவிட்ட நிலையில் ஏதேச்சையாக முகநூலில் கண்ணில் பட்டார். திருமணத்துக்குப் பிறகு சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்ட அவர், தற்போது அங்கும் சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். மஞ்சரிக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகளும் இருக்கிறார். உடம்பு இளைத்து, ஹேர் ஸ்டைலை மாற்றி ‘சிக்கென்று’ இருக்கிறார்.
கோலங்கள் தொடரில் அவரது நடிப்பை யாரும் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் அதேபோன்று அழுத்தம் வாய்ந்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் தமிழில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம் மஞ்சரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.