Sun TV Serial : மகராசி சீரியலில் காயத்ரி ராகினியிடம் ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாதுன்னு டயலாக் பேசறா. காயத்ரிக்கு ஒரு கப் நிறைய பாயசத்தை கொடுத்துட்டு, நீ இந்த வீட்டை விட்டு சீக்கிரமா போகப் போறேன்னு சொல்றா ராகினி. நான் எதுக்கு இந்த வீட்டை விட்டுப் போகணும்னு காயத்ரி கேட்க, உனக்குத்தான் கல்யாணம் ஆகப் போகுது இல்லே.. அப்பறம் நீ இந்த வீட்டை விட்டு போயித்தானே ஆகணும்னு ராகினி சொல்றா. அப்போது தான் காயத்ரி ஓவர் மசாலா உடம்புக்கு ஆகாதுன்னு சொல்ற மாதிரி ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாதுன்னு சொல்றா.
தமிழ் மாமாவை கல்யாணம் செய்துகிட்டா நான் எதுக்கு இந்த வீட்டை விட்டுப் போகணும்னு காயத்ரி மீண்டும் கேட்க. தமிழ் மாமா கூட நான் நல்லபடியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்.. நீயும் கல்யாணம் செய்துக்கொண்டு புருஷனோட நல்லபடியா வாழுன்னு சொல்றா ராகினி. நீ நல்லா வாழந்த லட்சணத்தைத்தான் தமிழ் மாமா சொல்லறாரு.. இந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் சொல்லுதே... இன்னும் தமிழ் மாமா உன்னை பொண்டாட்டியா ஏத்துக்குவாருன்னு நினைக்கிறியா?
Advertisment
Advertisements
உன் கனவு எதுவும் பலிக்காது.. நான் தான் தமிழ் மாமாவை கல்யாணம் செய்துகிட்டு உன்னை இந்த வீட்டை விட்டு துரத்தப் போறேன்னு வழக்கமா எல்லா சீரியல்களிலும் சொல்லும் டயலாக்கை காயத்ரியும் சொல்றா. ராகினி பேசாமல் நிற்க... இந்த பாயசத்தை குடுன்னு சொல்லி வாங்கி, இதை நான் சாப்பிடுவேன்னு நினைச்சியா.. நம்ம வீட்டு பப்பிக்கு குடுத்தா என்னை பார்த்து வாலாட்டிக்கிட்டு இருக்கும்னு சொல்லிட்டு குதூகலமா ஓடுகிறாள்.
மகராசி சீரியலில் ஏற்கனவே ராகினியை காதலிச்சு கல்யாணம் செய்துக்கொண்டு இருக்கும் தமிழ் மாமாவைத்தான் நாங்களும் கல்யாணம் செய்துக்குவோம்னு காயத்ரியும், வான்மதியும் சொல்லிகிட்டு திரிஞ்சாங்க. இதில் வான்மதி திருந்தி, தமிழ் மாமா கனவை துடைச்சுட்டா. ஆனால், இன்னும் காயத்ரி தமிழ் மாமாவைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு ஒற்றைக் காலில் நிற்கிறாள். இதை கேட்பார் யாரும் இல்லை. அம்மாவும் காயத்ரிக்கு சப்போர்ட் செய்யறாங்க.. அதுதான் கொடுமையான இருக்கு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"