சீரியலில் வில்லி, நிஜத்தில் ஃபிட்னெஸ் கில்லி: ’நாயகி’ அனு

ஃபிட்னஸில் பிரதீபாவுக்கு பிடித்தவர் நடிகை சமந்தா. ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அவர் போல் இருக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.

Nayagi Serial Anu: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில், அனு கலிவர்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரதீபா முத்து. சீரியலின் ஹீரோ திருவுக்கு தங்கையாகவும், அதே நேரத்தில் வில்லியாகவும் நடித்திருப்பார். இயல்பான வில்லத்தனமான பேச்சு, சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரதீபாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

கொரோனா வைரஸ் : எளிமையான முறையில் புரிய வைக்கும் இன்டராக்டிவ் டாஷ்போர்டுகள்

வில்லிகள் என்றாலே கிட்டத்தட்ட 30 – 35 வயதை கடந்தவர்கள் தான் என்ற நிலை இருந்தபோது, வெறும் 26 வயதிலேயே தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டினார். சென்னையில் பிறந்து வளர்ந்த பிரதீபாவுக்கு நாயகி சீரியல் தான் முதல் சீரியல். இருப்பினும் அவரது நடிப்பு மிகவும் அனுபவம் வாய்ந்ததாக இருக்கும். சீரியலில் வில்லத்தனமாக இருக்கும் பிரதீபா நிஜ வாழ்க்கையில் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக்.

 

View this post on Instagram

 

A post shared by Pradeepa Muthu (@pradeepa_muthu) on

சின்ன வயதிலிருந்தே தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள மிகுந்த கவனத்துடன் இருப்பாராம். பொதுவாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெரும்பாலானோர், உடற்பயிற்சி கூடங்களுக்கோ, அல்லது டயட்டை பின்பற்ற டைட்டிஷியனிடமோ படையெடுப்பார்கள்.  ஆனால் பிரதீபாவுக்கு அந்த வரைமுறைகள் எல்லாம் கிடையாது. கிடைக்கும் அனைத்து உணவையும் ரசித்து சாப்பிடுவாராம். ஆனால் சாப்பிடும் அனைத்தையும் அளவாக சாப்பிடுவது தான் பிரதிபாவின் சீக்ரெட்.

குறிப்பாக பச்சை காய்கறிகளையும் கீரை வகைகளையும் விரும்பி சாப்பிடுவாராம். அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்கள் பிரதீபாவை முயல்… முயல்… என்று அழைப்பார்களாம். அதேபோல இவர் எப்போதும் வெந்நீரை குடிக்கும் பழக்கம் உடைவரும் கூட. அது வெயில் காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி, ஜீரண சக்தி அதிகரித்து உடல் லேசாக இருக்கும் என்கிறார். ஃபிட்னஸில் பிரதீபாவுக்கு பிடித்தவர் நடிகை சமந்தா. ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அவர் போல் இருக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நாயகி சீரியலில் இருந்து விலகினார் பிரதீபா. இவருக்கு படம் பார்ப்பது தான் பிடித்த பொழுதுபோக்காம். அதோடு லேட்டஸ்ட் திரைப்படப் பாடல்களை கேட்பதும், நீச்சல் அடிப்பதும் பிரதீபாவுக்கு பிடித்தமான விஷயங்களாம். உணவு என்றால் தென்னிந்திய உணவும், தாய்லாந்து உணவும் எப்போதும் பிரதீபாவின் ஃபேவரிட்டாம்.

 

View this post on Instagram

 

A post shared by Pradeepa Muthu (@pradeepa_muthu) on

மினிமம் பேலன்ஸ் வேண்டாம்! ஸ்வீட் ஷாக் கொடுத்த எஸ்பிஐ.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close