Advertisment

’நாயகி’ சீரியலில் ’தெய்வமகள்’ டீம்: ஹீரோ, ஹீரோயின் எல்லாத்தையும் மாத்திட்டாங்கய்யா

சன் டிவி-யின் பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வந்த ‘நாயகி’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

author-image
WebDesk
Jul 24, 2020 16:44 IST
Sun TV Nayagi Serial New promo, Deivamagal team in nayagi

நாயகி சீரியலின் புதிய ப்ரோமோ

Sun TV Serial : இந்த கொரோனா பல சீரியல்களுக்கு எண்ட் கார்டு போட்டு விட்டது. தொற்று நோய் பயத்தின் காரணமாக ஆங்காங்கே இருக்கும் நடிகர்கள் ஷூட்டிங்கில் கலந்துக் கொள்வதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களே இதற்கு பிராதானம் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் அன் டிவி-யின் ‘நாயகி’ சீரியலும், புதிய குழுவினருடன் படபிடிப்பை தொடங்கியுள்ளது.

Advertisment

விஜய் டிவி திரும்பிய ரச்சிதா: முக்கிய சீரியலின் 2-ம் பாக கலக்கல் ப்ரோமோ!

சன் டிவி-யின் பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வந்த ‘நாயகி’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் ஆனந்தியாக நடிகை வித்யா பிரதீப்பும், திருவாக திலீப்பும் நடித்திருந்தார்கள். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிய இந்த சீரியல், கொரொனா லாக்டவுன் காரணமாக தடைபட்டது.

இந்நிலையில் தற்போது புதுப் பொலிவுடன் ‘நாயகி’ சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகக் கூறி, ‘நாயகி’ சீரியலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பழைய ஆளாக நடிகை அம்பிகா மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வந்த நக்‌ஷத்ரா இதில் இருக்கிறார். அதோடு 'தெய்வமகள்’ சீரியலில் பிரகாஷாக நடித்த கிருஷ்ணாவும், அவரின் அண்ணன் ராஜு கேரக்டரில் நடித்த அரவிந்த் மற்றும் வினோதினியாக நடித்த சுகாசினியும் இதில் வருகிறார்கள். அதேபோல ராஜுவின் ஃபிரெண்டாக கணேஷ் கேரக்டரில் நடித்த ரவியும் இந்த நாயகி சீரியலில் நடிக்கவுள்ளார். ‘தெய்வமகள்’ குழுவினர் மீண்டும் ஒன்று சேர்வதைப் பார்த்த ரசிகர்களுக்கு இப்போதே ஒருவித எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. ஆனால் கூடவே வாணி போஜனும், அண்ணியார் காயத்ரியாக நடித்த ரேகாவும் இடம் பெற்றால் இன்னும் நன்றாக இருக்கும், என்பதும் சிலரது கருத்து.

யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்: லைக்ஸை அள்ளும் ’காட்டுப் பயலே’ பாடல்!

புதுப் பொலிவுடன் ஒளிபரப்பாகவிருக்கும் நாயகி சீரியலில் எண்ணெய் வைத்து வழித்து சீவிய தலையுடன் கிருஷ்ணா இடம்பெற்றிருக்கிறார். அதோடு மற்றவர்களும் கிராமத்து லுக்கில் காணப்படுகிறார்கள். புதிய கதையுடன் சீரியல் மீண்டும் தொடங்குகிறதா என்ற கேள்விக்கு வரும் திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு பதில் தெரியும்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

#Tv Serial #Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment