Sun TV Nayagi Serial : சன் டிவியில் 'நாயகி' சீரியல் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாயகி சீரியலை திரு -ஆனந்தியின் கல்யாணம் நடப்பதில் ஆரம்பித்து மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் ஆனந்தியாக நடித்த நடிகை கதை சூடு பிடிக்கும் சமயத்தில் நடிக்க முடியாது, என்று கை விரித்துவிட, சீரியல் குழுவினருக்கு அப்போது கை கொடுத்தவர் தான் நடிகை வித்யா. தமிழ் படங்களில் நடித்திருந்த வித்யா, இக்கட்டான சூழலில் ’நாயகி’ சீரியலுக்கு உயிர்கொடுத்தவர் என்று இயக்குநர் இவரைப் பாராட்டி பேசி இருக்கிறார்.
கொரோனாவுக்கு பின் வறுமை உறுதி : இந்தியாவில் 40 கோடி மக்களின் நிலை என்ன?
கேரளாவை பிறப்பிடமாக கொண்ட வித்யா பிரதீப், கண் சார்ந்த ஆராய்ச்சி படிப்பு படித்திருக்கிறார். பிரபல கண் மருத்துவமனையில் பணி புரிந்தபடியே சீரியலில் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். பெண்டிங்கில் இருக்கும் வேலையையும் கிடைக்கும் கால அவகாசங்களில் முடித்து தந்து விடுவதால், பிரபல மருத்துவமனை இவருக்கு ஆதரவளிப்பதாக சொல்லும் வித்யா, தனக்கு எப்போதும் சென்னை தான் கனவு நகரமாக இருந்திருக்கிறது என்றும் கூறுகிறார்.
படிக்க வந்து பின்னர் நடிக்கும் ஆசையில் மட்டுமல்ல, பணிக்காகவும் சென்னைக்கு வந்து, இரண்டுமே இப்போது நிறைவேறி இருக்கிறது என்றும் ஆனந்தப்படுகிறார். தமிழ் நன்றாக பேசவும் எழுதவும் வருமாம் வித்யாவுக்கு. படங்களில் நடித்ததை விட நாயகி சீரியல் தனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தந்து இருக்கிறது என்றும் கூறுகிறார்.
டிவி துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘குயின்’: டிடி சீக்ரெட்ஸ்!
”ஆரம்பத்தில் உங்களுக்கும் திருவுக்கும் கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று கேட்டார்கள். இப்போது, அனன்யாவை எப்போது தான் அடக்கி வைப்பீர்கள்” என்று கேட்கிறார்கள் என்று கூறும் வித்யாவின் கண்கள் அழகாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்களாம். இந்த கண்ணழகி கண் ஆராய்ச்சியாளராக ஆனது எப்படி என்று கேட்டால், ”ஆசைப்பட்டேன் படித்தேன்” என்கிறார் சிம்பிளாக.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.