News Reader Anitha Sampath : சன் டிவி-யில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் அனிதா சம்பத். இவருக்கு இணைய ரசிகர்கள் ஏராளம். ட்விட்டரில் இவரது பெயரில் ஒரு கணக்கு இருக்கிறது. 50000 ஃபாலோயர்களைக் கொண்டிருக்கும் அந்தக் கணக்கில் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு கருத்துகளும், அனிதாவின் படங்களும் வெளியாகும். இதைக் கவனித்த நெட்டிசன்கள் இதை அனிதா தான் பதிவிடுகிறார் என நினைத்து வந்தனர்.
மார்ச் 27-ம் தேதிக்குப் பிறகு எந்த படமும் வெளியாகாது: களமிறங்கிய விநியோகஸ்தர்கள்…
8, 2020
இப்படி பல சர்ச்சையான ட்வீட்கள் அனிதாவின் அந்த ஐடியில் இருந்து பதிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக திரெளபதி படத்தை பாராட்டிய ட்வீட்டுக்கு, கடமை மறவாமல் நன்றி தெரிவித்திருந்தார் படத்தின் இயக்குநரான மோகன் ஜி. இந்நிலையில் அது தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை எனவும், தன்னுடைய பெயரில் செயல்படும் போலி அக்கவுண்ட் எனவும் தெரிவித்துள்ளார் அனிதா.
இது குறித்து அவர் பேசுகையில், ”‘திரெளபதி' படத்தை நான் பார்க்கவே இல்ல. ஆனா, இந்தப் படத்தைப் பத்திப் பாராட்டி எழுதி போஸ்ட் போட்டிருக்காங்க. இதை உண்மைனு நினைச்சிட்டுப் படத்தோட இயக்குநர் மோகன் நன்றி சொல்லியிருந்தார். இது எனக்குத் தப்பா இருந்தது. அதனால ட்விட்டர்ல என்னோட ஒரிஜினல் ஐடில இருந்து மோகன் சாரை டேக் பண்ணி, `அந்தக் கருத்து என்னோடது இல்லை'னு சொல்லியிருந்தேன். பொதுவா, எனக்கு எந்தப் படம் பத்தியும் விமர்சனம் பண்றதுல விருப்பம் இல்ல. இன்ஸ்டாவுல, ட்விட்டரில என் பெயர்ல இருக்குற இந்த ஐடி போலினு எழுதுனேன்.
9, 2020
பாண்டியன் ஸ்டோர்ஸ்: நிலாவ இப்படி யாரும் வர்ணிச்சதே இல்லப்பா…
சொல்லப்போனா அந்த ஃபேக் ஐடிக்கு 50,000 ஃபாலோயர்கள் இருக்காங்க. என்னோட ட்விட்டர் பக்கத்துக்கு வெறும் 12,000 பேர் மட்டும்தான் இருக்காங்க. இந்த ஃபேக் ஐடி, குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்னு நினைக்கிறேன். ஏன்னா, அந்தக் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஆதரவான போஸ்ட்டுகளைப் போட்டுட்டு வர்றார். கூடிய சீக்கிரம் போலீஸ்கிட்ட இது சம்பந்தமான புகாரைக் கொடுக்கலாம்னு இருக்கேன்'' என்றார். பிரபலமானவர்களின் பெயர்களில் உருவாக்கப்படும், இந்த மாதிரியான போலி சமூக வலைதள கணக்குகளை எவ்வாறு தடுப்பது என பல பிரபலங்கள் தத்தளித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"