கலைஞர் டிவி-யின் பிரபல சீரியலில் இணைந்த பாண்டவர் இல்லம் நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை பாப்ரி கோஷ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் இணைந்துள்ளார்.

Advertisment
சன் டிவில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஒளிபரப்பான நிலையில், கடந்த அக்டோபர் மாதம் நிறைவைடைந்தது. பாண்டவர் இல்லம் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ். இவர் தற்போது சிறிய இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் தொடரில் நடிக்கவுள்ளார். இதனால், அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு கண்ணேதிரே தோன்றினால் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் தொடரில் நடிகை மாளவிகா அவினாஷ் - ஸ்வேதா கெல்கே முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகை மாளவிகா அவினாஷ், ஜே ஜே, ஆறு, ஆதி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
Advertisements
அதே போல, சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப் போல தொடரில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை ஸ்வேதா.
மாளவிகா அவினாஷ் - ஸ்வேதா இருவரும் சேர்ந்து கலைஞர் டிவியில் நடித்துவரும் கண்ணெதிரே தோன்றினால் தொடரில், தற்போது நடிகை பாப்ரி கோஷ் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாப்ரி கோஷ், மாளவிகா போன்ற திறமைவாய்ந்தவருடன் நடிப்பதில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ரவிச்சந்திரனுக்கு நன்றி. இந்தத் தொடருக்கான என்னுடைய சிறந்த நடிப்பை நான் வழங்குவேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கண்ணெதிரே தோன்றினால் தொடரில், பாப்ரி கோஷ் கதாபாத்திரத்தின் புரோமோ விடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“