பிகில், விஸ்வாசம், பேட்ட... 5 நாள் அதகளப்படுத்தும் சன் டிவி
Pongal movies in sun tv: ரொம்பவும் போட்டு மூளையை கசக்காமல், மாஸ் படங்களை வளைத்துப் போட்டே டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் வித்தையை மற்ற சேனல்கள் சன் டிவி.யிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
Pongal movies in sun tv: ரொம்பவும் போட்டு மூளையை கசக்காமல், மாஸ் படங்களை வளைத்துப் போட்டே டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் வித்தையை மற்ற சேனல்கள் சன் டிவி.யிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
Sun TV Pongal Movies: Tamil tv news pongal movies in sun tv Bigil Viswasam Petta Namma Veettu Pillai Sanga Thamizhan announced- சன் டிவி பொங்கல் திரைப்படங்கள்
Sun TV Pongal Movies: பொங்கல் பண்டிகையையொட்டி பார்வையாளர்களை தக்கவைக்க முன்னணி சேனல்கள் முட்டிக் கொண்டிருக்கும் வேளையில், சன் டிவி அதிரடி பாய்ச்சல் காட்டியிருக்கிறது. 5 நாள் சூப்பர் ஹிட் திரைப்படங்களை வரிசையாக போட்டு, டி.ஆர்.பி.யை எகிறவைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சன் டிவி.
Advertisment
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
பொங்கலுக்கு என்ன படம் ரிலீஸ் ஆகிறது? என்பதற்கு சற்றும் குறையாத எதிர்பார்ப்பு, பொங்கலன்று டி.வி.யில் என்ன படம் ஓடுகிறது? என்பதிலும் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்தடுத்து 5 சூப்பர் ஹிட் திரைப்படங்களை வெளியிட்டு அதகளப்படுத்துகிறது சன் டிவி. அந்த 5 படங்களுமே மாஸ் ஹீரோக்கள் நடித்தவை என்பது இன்னும் சிறப்பு.
Advertisment
Advertisements
Pongal movies in sun tv; சன் டிவி பொங்கல் திரைப்படங்கள்
ஜனவரி 15- விஜய் நடித்த பிகில்
ஜனவரி 16- சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை
ஜனவரி 17- விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன்
ஜனவரி 18- விஸ்வாசம்
ஜனவரி 19- பேட்ட
ஜனவரி 15-ம் தேதி விஜய்யின் பிகிலில் ஆரம்பித்து, ஜனவரி 19-ம் தேதி ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் முடிகிறது சன் டிவி.யின் இந்த மெகா கொண்டாட்டம். இடையில் ஜனவரி 16 அன்று மொத்தக் குடும்பத்தினரும் ரசிக்கும் வகையிலான நம்ம வீட்டுப் பிள்ளை, ஜனவரி 17, 18-ல் முறையே சங்கத் தமிழன், விசுவாசம் என ஃபேமிலி எண்டர்டெயினர்கள் காட்டப்படுகின்றன.
ரொம்பவும் போட்டு மூளையை கசக்காமல், மாஸ் படங்களை வளைத்துப் போட்டே டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் வித்தையை மற்ற சேனல்கள் சன் டிவி.யிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.