சன் டிவி சீரியலில் இருந்து பிரபல வாரிசு நடிகை விலகல்: வேதனையை கொட்டும் ரசிகர்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நாயகியாக நடித்து வந்த பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்ததால் ரசிகர்கள் அக்கா போகாதீங்க என்று வேதனை தெரிவித்து வருகின்றனர்.

sun tv, poovae unakaaga serial, sun tv serial, jovitha livingston quits from poovae unakaaga serial, சன் டிவி, பூவே உனக்காக சீரியல், ஜோவிதா லிவிங்ஸ்டன், actor livigston daughter jovitha livingston, poovae unakaaga serial

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நாயகியாக நடித்து வந்த பிரபல நடிகரின் மகள் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து, ரசிகர்கள் அக்கா போகாதீங்க என்று வேதனையைக் கொட்டி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பூவே உனக்காக தொடர் சீரியல் பார்வையாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. பூவே உனக்காக சீரியலில் 2 நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர்தான் ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோவாகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த லிவிங்ஸ்டனின் மகள் ஆவார். இவர் பூவே உனக்காக சீரியலில் கீர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பூவரசி – கீர்த்தி – கதிர் கதாபாத்திரங்கள்தான் பூவே உனக்காக சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்கள். இந்த சீரியலில் கதிர் கீர்த்தியை காதலித்த நிலையில், கதிருக்கும் பூவரசிக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிடுகிறது. ஆனாலும், கதிர் கீர்த்தியையே நினைத்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும், பூவரசி கதிரின் காதலை சேர்த்து வைக்க உதவி செய்கிறார். ஆனால், துரதிருஷ்டவசமாக, சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடுகளில், கீர்த்தி – செல்வம் என்ற கதாபாத்திரத்தை திருமணம் செய்துகொள்கிறது. இதனால், கதிர் – பூவரசியும் சேர்ந்து வாழ்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்படி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கீர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜோவிதா லிவிங்ஸ்டன் மேபடிப்பு படிக்க செல்வதால் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுவதாகவும் விரைவில் ரசிகர்களை வேறு ஒரு புராஜக்டில் சந்திப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜோவிதா லிவிங்ஸ்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “ஹலோ கய்ஸ், நான் மேற்படிப்பை தொடங்க இருப்பதால், பூவே உனக்காக சீரியலில் இருந்து வெளியேறுவதை உங்கள் அனைவருக்கும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய சன் டிவிக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். எல்லாத்துக்கும் மேல், உங்கள் அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் இதயத்தின் ஆழத்தில் இருண்து நன்றிகள். நிச்சயமாக நீங்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்கமாட்டேன். வாழ்க்கையில், நான் செய்யும் எல்லாவாற்றிலும் எனக்காக நீங்கள் நிச்சயமாக இருப்பீர்கள். உங்களை விரைவில் அடுத்த புராஜக்டில் சந்திக்கிறேன். மீண்டும் உங்களுக்கு எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

பூவே உனக்காக சீரியலில் இருந்து ஜோவிதா லிவிங்ஸ்டன் விலகுவதை அறிந்து வருத்தமடைந்த ரசிகர்கள், “அக்கா போகாதீங்க… திரும்பி வாங்க என்று கூறி வருகின்றனர்.

ஜோவிதாவின் பதிவுக்கு கம்மெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர், “நீங்க சீரியலில் இருந்து விலகினாலும், என்றைக்கும் கீர்த்தி அக்காவாக எங்கள் மனதில் இருப்பீர்கள் அக்கா… உங்களுடைய அடுத்த புராஜக்டுக்காக நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv poovae unakaaga serial actress jovitha livingston quits from the serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com