கீர்த்திக்கும் செல்வத்துக்கும் திருமண ஏற்பாடு: என்ன செய்வாள் பூவரசி?

பலமுறை தன் காதலை கீர்த்தியிடம் புரிய வைக்க முயன்றும், தோல்வியை தழுவுகிறான் கதிர்.

Tamil Serial News, Sun TV Poove Unakkaga
பூவே உனக்காக சீரியல்

Tamil Serial News:  லாக் டவுன் நேரத்தில் பூவே உனக்காக என்னும் புதிய தொடரை ஒளிபரப்ப தொடங்கியது சன் டிவி. இந்த சீரியலில், ’கிழக்கு சீமையிலே’, ’பசும்பொன்’, ’ராமன் அப்துல்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்த விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் கதிர் என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் அருணும், பூவரசியாக ராதிகா ப்ரீத்தியும் அவரது தோழி கீர்த்தியாக ஜோவிதா லிவிங்ஸ்டனும் நடித்து வருகிறார்கள். பூவரசியின் அம்மா ரத்தின வள்ளியாக தெலுங்கு நடிகை ஆமணி நடித்து வருகிறார். இவர்களுடன் தேவி பிரியா, ரேகா நாயர், அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி அஞ்சு! இப்போ சீரியல்ல அம்மா…

பூவரசியும் கீர்த்தியும் மிக நெருங்கிய தோழிகள். இருவருக்கும் ஒருவர் மீது மற்றொருவருக்கு அவ்வளவு பாசம். அவ்வப்போது ஒரு இளைஞன் பூவரசி கனவில் வந்து போகிறான். அவன் மீது அவளுக்கு இனம் புரியாத பற்று. விதியின் விளையாட்டால் கனவில் வந்த இளைஞன், கீர்த்தியை காதலிக்கும் கதிர். பூவரசியின் அம்மா கதிரை கட்டாயப்படுத்தி அவனை பூவரசிக்கு திருமணம் செய்து வைக்கிறார். கீர்த்தியும் தன் உயிர் தோழி பூவரசிக்காக கதிரை விட்டுக் கொடுக்கிறாள்.

பின்னர் இந்த விஷயம் பூவரசிக்கு தெரிய வருகிறது. எப்படியாவது கதிரை கீர்த்தியுடன் சேர்த்து வைக்க வேண்டுமென அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடுகிறாள். இந்த விஷயத்தை தெரிந்துக் கொண்ட கீர்த்தி, தனக்கு பழைய விஷயங்கள் அனைத்தும் மறந்து போனதாக கூறுகிறாள். இந்த நிலையில் கீர்த்தியை தனியாக விடக் கூடாது என, அவளை வீட்டிற்கு அழைத்து வருகிறாள் பூவரசி.

உதயநிதி பிரசாரம் தடை: திமுக உயர்நிலைக் குழு கடும் எச்சரிக்கை!

பலமுறை தன் காதலை கீர்த்தியிடம் புரிய வைக்க முயன்றும், தோல்வியை தழுவுகிறான் கதிர். பூவரசியும், கீர்த்தியும் சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்க வேண்டுமென்றால், கீர்த்தியை அவர்கள் வாழ்க்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும். அதற்கு செல்வத்துக்கு அவளை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் பூவரசியின் அம்மா ரத்தின வள்ளி. அதற்காக செல்வத்தின் அப்பா சக்திவேலிடமும் பேசி விட்டார். அவர்கள் அனைவருக்கும் இதில் பூரண சம்மதம். இதற்கு பூவரசி என்ன சொல்வாள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv poove unakkaga serial kathir poovarasi tamil serial news

Next Story
பொய்யாக இருக்கும் அர்ச்சனா, நிஷா, சம்யுக்தா.. சரவெடி சுச்சிக்கு பை பை!Bigg Boss 4 Tamil Vijay Tv Kamala Hassan Suchi Bala Aari Anita Som Day 50 review
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com