சன் டிவியில் பார்வையாளர்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் ஒன்று ஜூலை 23-ம் தேதியுடன் கடைசி எபிசோடு ஒளிபரப்பாகி நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய சீரியல் ஒன்று வர உள்ளது. முடிவடைந்த பிரபல சீரியலும் வரப்போகிற புதிய சீரியலும் என்ன என்று தெரியுமா?
சில ஆண்டுகளாக சன் டிவி சீரியல்கள் சற்று தொய்வை சந்தித்தாலும் மீண்டும் சன் டிவி சீரியல்களே டி.ஆர்.பி-யில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சன் டிவியில் காலை முதல் மாலை வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, இல்லத்தரசிகள் முதல் அலுவலகம் செல்லும் பெண்கள் வரை, சீரியல் பார்க்கும் பெண்களை கிண்டல் அடித்துக் கொண்டே சீரியல் பார்க்கும் ஆண்கள் என பல்வேறு தரப்பினரும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'திருமகள்' சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். திருமகள் சீரியலின் கதை இதுதான், “செல்வந்தர் வீட்டு மகன், ஏழை வீட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான், இதனால் அவர்கள் சந்திக்கும் கஷ்டங்களும், சவால்களும்தான் 'திருமகள்' சீரியல்.
திருமகள் சீரியல் அக்டோபர், 2020-ல் ஒளிபரப்பாகத் தொடங்கி 783 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானது. இதில் ஹரிக்கு சாது, சுரேந்தர் சண்முகம் , சமீதா ஸ்ரீகுமார், ரேகா சுரேஷ் என்று பலர் நடித்து வந்தனர்.
'திருமகள்' சீரியலுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு காட்டி வந்த நிலையில், இந்த சீரியல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. திருமகள் சீரியலின் கடைசி எபிசோட் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து அடுத்து வரப்போகும் சீரியல் என்னவாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருமகள் சீரியல் முடிந்ததும், சன் டிவியில் மீனா என்ற சீரியல் ஜூலை 24 முதல் ஒளிபரப்பாக உள்ளது. மீனா தொடரில் 'இலக்கியா' சீரியல் மூலம் பிரபலமான நடிகர் ஜெய் எஸ்.கே ஹீரோவாகவும் ஆனந்தராகம் சீரியலில் நடித்த இந்து சௌத்ரி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"