Advertisment

ராசாத்தியை வச்சு இப்படி விளையாட்டு காண்பிக்கறீங்களே...!

யாராவது சூப்பர் ஜோடின்னு சொல்லிட்டா, நான் ராசாத்தி பக்கம் திரும்ப மாட்டேன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sun tv rasathi serial

sun tv rasathi serial

sun tv rasathi serial: சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் ராசாத்தி. இதில் விசித்திரா, சுலக்ஷனா, நித்யாவுடன் நடிகர் செந்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சீரியல் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு எபிசோட்களில் வந்த விஜயகுமார் பிறகு இல்லாமல் போனார். கதையில் புதுத் திருப்பமாக நடிகை தேவயானி ஒரு கேரக்டரில் நடித்து இருந்தார். நாயகியாக நடிப்பவர் ராஜஸ்தான் பொண்ணு.

Advertisment

இந்த சீரியலும் கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாயகன் பாண்டியன், நாயகி ராசாத்தி இருவரும் கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கும்போது கோயில் மணி ராசாத்திக்கு எட்டலையாம். உடனே பாண்டியன் ராசாத்தியைத் தூக்கிக்கொண்டு, மணி அடின்னு சொல்றான். அவளும் அடிக்கிறாள்.. இது காலம் காலமாக சீரியல், சினிமாக்களில் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ரியல் வாழ்க்கையில் மணி எட்டவில்லை என்றால் எக்கி எக்கி குதித்து மணியை அடிப்பதுதான் நடைமுறை...ஹும்..இதெல்லாம் கதைக்கு ஒத்து வருமா?

வில்லன் போலீஸ் அங்கு வந்து, ராசாத்தி எனக்கு சொந்தமானவ..அவளை தூக்கி வச்சுக்கிட்டு நீ நிக்கிறியா...இறக்கி விடுடான்னு கத்தறான். அவளை எனக்கு கட்டிக் கொடுக்கறேன்னு ராசாத்தி அண்ணன் சொல்லி இருக்கார். ரோட்டில் நடந்து போனால், எனக்கும் அவளுக்குத்தான் ஜோடிப் பொருத்தம் கும்முன்னு இருக்குன்னு எல்லாரும் பேசுவாங்கன்னு சொல்றான் போலீஸ்காரன். சரி, நீங்க ரெண்டு பேரும் ரோட்டில் நடந்து போங்க...யாராவது சூப்பர் ஜோடின்னு சொல்லிட்டா, நான் ராசாத்தி பக்கம் திரும்ப மாட்டேன். ஒரு வேளை அப்படி சொல்லலேன்னா நீ ராசாத்தி பக்கம் திரும்பாதே.. எனக்குத்தான் ராசாத்தின்னு சொல்றான் பாண்டியன்.

ரோட்டில் ராசாத்தி கையைப் பிடிச்சுக்கிட்டு போலீஸ் வெற்றி நடை போடறான்... அவனை போலீசாத்தான் பார்க்கறாங்க மக்கள். என்ன ராசாத்தி.. போலீஸ்காரன் கூட எங்கே போறேன்னு கேட்கறாங்க..இப்போ சொல்லுங்க வெற்றி யாருக்கு?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sun Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment