Sun TV Rasathi Serial: 90-களில் இருந்த எவருக்கும் நடிகை விசித்ராவை தெரியாமல் இருக்காது. கவர்ச்சி வேடம், குத்துப் பாட்டுகளில் அறிமுகமாகி, காமெடியிலும் கலக்கியவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் விசித்ரா நடித்திருக்கிறார். ரஜினிகாந்தின் ‘முத்து’ படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் காட்சி பலருக்கும் நினைவு இருக்கும்.
Advertisment
குணச்சித்திர வேடங்களிலும் நடித்த விசித்ரா தொடர்ந்து சீரியல்களிலும் நடித்தார். அதன் பின் திருமணமாகி சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். மைசூரில் ஓட்டல் தொடங்கி, அங்கேயே செட்டிலும் ஆனார். தற்போது 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்புக்கு ரீ எண்ட்ரியாகியிருக்கிறார். ஆனால் சினிமாவில் அல்ல, சீரியலில்.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலான, ‘ராசாத்தி’யில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விசித்ரா. இதைப்பற்றி அவர், எல்லாரையும் மாதிரி எனக்கும் ஹீரோயின் ஆகணும்ங்கற ஆசை தான் முதல்ல இருந்துச்சு. ஆனா குத்துப்பாட்டுக்கு ஆடுறவங்க, கவர்ச்சி நடிகைங்கிற அடையாளம்தான் எனக்கு முதல்ல கிடைச்சது. அதுக்காக பெருசா வருத்தப்படலை. ஏன்னா, அன்னைக்கு கவர்ச்சி நடிகைகளை விரல்விட்டு எண்ணிடலாம். அதுலேயும் என்னை ரஜினி சாரே தன்னோட ஒரு படத்துக்கு ரெகமெண்டு பண்ணினார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கவுண்டமணினு பெரிய பெரிய ஆளுங்களோட வொர்க் பண்ணிட்டேன்.
கல்யாணத்துக்கு அப்புறம் நான் எடுத்துக்கிட்ட 18 வருஷ பிரேக் கொஞ்சம் அதிகம் தான். ஆனா, கணவரோட வேலை, 3 பிள்ளைகள், பொருளாதாரத்துக்கு ஹோட்டல்ன்னு நிக்கக் கூட நேரமில்லை. இப்போ சீரியலுக்கு இருக்க வரவேற்பு என்ன ஆச்சர்யப்படுத்துது. அந்த கேரக்டரை வீட்ல ஒருத்தரா ரசிகர்கள் நினைக்கிறாங்க. அப்படி, கவர்ச்சி நடிகை விசித்ராங்கறது மாறி, இனி உங்க வீட்ல ஒருத்தரா என்னைப் பாப்பீங்க” என்கிறார்.
முத்து படத்தில் விசித்ரா
அன்பு ராஜா தயாரிக்கும் ’ராசாத்தி’ சீரியலை ராஜ்கபூர் இயக்குகிறார். ’சின்னத்தம்பி’ சீரியலில் நடித்த பவானி ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர்கள் விஜயக்குமார், செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வரும் 23-ம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் அதன் ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.