மெல்லிய புன்னகை, காட்டன் புடவை, பெரிய பொட்டு, தலையில் மல்லிகைப்பூ என்று தோற்றத்தில் புதுப்பொலிவுடன் காட்சித் தந்து பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கிறார்.
மெல்லிய புன்னகை, காட்டன் புடவை, பெரிய பொட்டு, தலையில் மல்லிகைப்பூ என்று தோற்றத்தில் புதுப்பொலிவுடன் காட்சித் தந்து பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கிறார்.
Sun TV Shows : சன் டிவியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாம்பியன்ஸ், என்று ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தினார்கள். இதில் ஏகப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துக்கொண்டு, பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளித்தனர். காதுகளுக்கும் விருந்தளிக்கும்படி இனிமையான பாடல்கள், இசை வாசிப்பு என்று அசத்தினார்கள். லாக்டவுன் காலத்தில் இந்த நிகழ்ச்சியை சன் டிவி ஞாயிறு தினங்களில் மட்டும், மதிய வேளையில் மறு ஒளிபரபரப்பு செய்து வருகிறது. நிகழ்ச்சியில் ரேவதி, பட்டிமன்ற புகழ் ராஜா இருவரும் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர். ரேவதி மெல்லிய புன்னகை, காட்டன் புடவை, பெரிய பொட்டு, தலையில் மல்லிகைப்பூ என்று தோற்றத்தில் புதுப்பொலிவுடன் காட்சித் தந்து பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கிறார்.
Advertisment
ஆஸம் ஆத்மிகா, க்யூட் பிரியா பவானி சங்கர்: படத் தொகுப்பு
நடிகை ரேவதி அந்த காலத்திலேயே சென்னையின் மேற்கு முகப்பேரில் இருக்கும் பேனியன் அமைப்பில் , தன்னை தொடர்பு படுத்திக்கொண்டு, அங்கு இருப்பவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்து வந்தார். பேனியன் அமைப்பில் மன வளர்ச்சி குன்றியவர்கள் அனைத்து வயதினரும் அங்கு அடைக்கலம் ஆகி, தங்கி இருக்கின்றனர். இந்த அமைப்புக்குத்தான் ரேவதி அடிக்கடி செல்வார். காலப்போக்கில் ரேவதியின் அமைப்பு தான் பேனியன் என்று எழுத ஆரம்பித்து விட்ட நிலையில், இல்லை இது என்னோட அமைப்பு இல்லை.. நட்பு ரீதியாகவும், உதவும் நோக்கிலும்தான் அடிக்கடி இந்த அமைப்புக்கு வந்து போவதாக ரேவதி கூறி இருந்தார்.
இப்படி ரேவதியின் உதவும் உள்ளத்துக்கு ஏற்ற வகையில், சன் டிவி சேம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு ரேவதியை நடுவராக்கி அழகு பார்த்தது. ரேவதியும் நிகழ்ச்சியின் ஜட்ஜ் என்பதற்கு ஏற்ப பொருத்தமாக இருந்தார். வாய் பேச முடியாத காது கேளாதோர் பேசும்போது, அவர்களுக்குத் தெரிந்த பாஷையில் பேசுவது. மற்ற மாற்றுத் திறனாளிகள் செய்யும் திறமையான செயல்களுக்கு ஊக்கம் தருவது என்று நிகழ்ச்சி பார்க்க அருமையாக இருக்கிறது. நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொள்கிறார்கள். இந்த வாரம் நடிகை லைலா கலந்துக்கொள்கிறார். இவரும் மாற்றுத் திறனாளிகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் நிகழ்ச்சியும் இருக்கிறது. பட்டிமன்ற ராஜா முதன் முறையாக இந்த ஷோ மூலம் பல்சுவை நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு சிறப்பாக தனது பணிகளை செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”