சன் டிவி தொடர்களில் நடிக்கும் நடிகர்களை கௌரவிக்கும் வகையில் சன் டிவி நிறுவனம் சன் குடும்ப விருது விழாவை நடத்தியது. அதில் இளம் வில்லி விருது நடிகை ஷாமிலிக்கு வழங்கப்பட்டது. சின்னத்திரையில் நுழைந்து மூன்று வருடங்களில் 20 சீரியலுக்கு மேல் நடித்துள்ளா ஷாமிலி, சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.
12, 2020
முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதைத் தொடர்ந்து வில்லி கதாபாத்திரத்தில் அதிகம் நடித்து வருகிறார்.
11, 2020
விருதை வாங்கிய ஷாமிலி, "என்னுடைய அம்மா என்னுடன் சீரியலில் நடிக்கும் நடிகர்களை பார்த்து இவர்கள் நல்லா நடிக்கிறாங்க, அவர்கள் நல்லா நடிக்கிறாங்க என்று கூறுவார். ஆனால், ஒரு நாள் கூட என்னை பார்த்தது பாராட்டியது கிடையாது. அதோடு என் நடிப்பை பற்றிப் பேசியதும் கிடையாது. நான் இந்த விருதை வாங்கியது உங்களுக்கு பிடிக்குமா என தெரியலை" என்று சொல்லி வாய்விட்டு அழுதார். இதை பார்த்து அரங்கத்தில் உள்ள அனைவருமே கண் கலங்கினார்.