தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியலான ரோஜா சீரியலில் தற்போது வில்லியாக நடித்து வருபவருக்கு பதிலாக இனி புது வில்லி அறிமுகமாகிறாராம். ஆனால், அவர் புது வில்லி இல்லையாம் பழைய வில்லிதானாம். என்ன குழப்பமாக இருக்கிறதா? புது வில்லி யார்னு பாருங்க…
தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி சீரியல்களுகு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், எப்போதும் சன் டிவி சீரியல்கள் முதலிடத்தைப் பிடித்து வருகின்றன. அப்படி ஏராளமான ரசிகர்களை ஈர்த்து டி.ஆர்.பி-யில் தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தில் இருந்து வருகிறது ரோஜா சீரியல்.
சன் டிவியில் தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சிரியலுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும் ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். இதில் மிரட்டும் வில்லியாக ஷாமிலி சுகுமார் நடித்து வருகிறார்.
இந்த சூழலில், நடிகை ஷாமிலி சுகுமார் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தான் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். முதலிடத்தில் இருக்கும் சீரியலில் இருந்து ஏன் விலகுகிறார் என்று ரசிகர்கள் என்று பலரும் கேள்வி எழுபிய நிலையில், ஷாமிலி சுகுமார் கர்ப்பமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார். அதனால், ரோஜா சீரியலில் ஷாமிலிக்கு பதில் வில்லியாக இனி யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், ரோஜா சீரியலில் ஷாமிலி சுகுமாருக்கு முன்னதாக வில்லியாக நடித்து வந்த ஐஸ்வர்யா மீண்டும் வில்லியாக ரீ எண்ட்ரி ஆகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், ரோஜா சீரியல் ரசிகர்கள் உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது புரிகிறதா? ரோஜா சீரியலில் இனி புது வில்லி, ஆனால், பழைய வில்லிதானாம் என்பதின் அர்த்தம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"