சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் இந்த வார ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அனுவை கீழே தள்ளிவிட்டது நான் தான் என ரோஜா கூறுவதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Advertisment
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் ரோஜா சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போது சீரியலில், சாக்ஷியின் ஆட்களால் ரோஜாவை தள்ளிவிட்டதால் தலையில் காயமடைகிறாள். பின்னர், செண்பகம், ரோஜாவுக்கு ரத்தம் கொடுத்து அவளை காப்பாற்றுகிறார்.
அதன்பின் டைகர் மாணிக்கம் ரோஜாவை வந்து சந்திக்கிறார். அவர் கூறும் விஷயங்களை அர்ஜூனிடம் மறைக்கிறாள் ரோஜா. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில், அனு எங்கிருக்கிறாள் என கண்டுபிடிக்க சொல்லி தன் ஆட்களிடம் சொல்கிறாள் சாக்ஷி. அனுவை கடத்தி வைத்திருக்கும் சாக்ஷியின் ஆட்கள், அனுவை கொலை செய்ய வருகிறார்கள். அர்ஜூன் அவர்களிடம் சண்டை போட்டு அனுவை காப்பாற்றுகிறான்.
பின்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் ரோஜா, அனுவை துரத்தி வந்து கீழே தள்ளி விட்டது நான் தான் என சொல்ல அதிர்ச்சியாகிறான் அர்ஜூன். இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது சன் டிவி.
ரோஜா ஏன் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டால், அவள் இவ்வாறு குற்றத்தை ஒத்துக் கொண்டதால் அர்ஜூன் என்ன செய்ய போகிறான் என்பது அடுத்த எபிஷோடுகள் மூலம் தெரிய வரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil