Advertisment

Roja Serial Promo: அனுவுக்கு ஆபத்து... ரோஜா கைது?

Sun TV Roja serial promo updates roja arrested: ரோஜா சீரியல் ப்ரோமோ; கைதாகிறார் ரோஜா; உயிருக்கு ஆபத்தான நிலையில் அனு

author-image
WebDesk
Jul 11, 2021 15:25 IST
Roja Serial Promo: அனுவுக்கு ஆபத்து... ரோஜா கைது?

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

Advertisment

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது இந்த ரோஜா சீரியல். இந்த சீரியலில், சிபு சூர்யன், பிரியங்கா மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சீரியல் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜூன் மற்றும் ரோஜாவின் திருமண வரவேற்பு விழா நடைபெறுவதாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு முக்கிய திருப்பம் நடந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், அனு ரிமோட்டை அழுத்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்படுகிறது. ரோஜா தீயில் மாட்டிகொள்கிறாள். பின்னர் தப்பித்து மாடிக்கு சென்று அனுவின் கையில் இருக்கும் ரிமோட்டை பறிக்க முயல்கிறாள். இந்த சண்டையில் அனு மாடியிலிருந்து கீழே விழுந்து விடுகிறாள்.

உயிருக்கு போராடும் அனுவை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் காரணம், ரோஜா தான் என்று நினைக்கும் டைகர் மாணிக்கம், காவல் துறையில் புகார் அளித்து, ரோஜாவை கைது செய்யவைக்கிறார்.

இந்த ப்ரோமோக்கள் வெளியானதிலிருந்து ரசிகர் என்ன நடந்து என தெரிந்துக் கொள்ள, அந்த எபிஷோடுகளின் ஒளிப்பரப்புக்காக காத்திருக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Roja Serial #Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment