கவர்ச்சியா, காமெடியா? சன் டி.வி சீரியலில் வடிவேலு ஜோடி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்த நடிகையை சன் டிவியின் ரோஜா சீரியலில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அந்த நடிகையின் கேரக்டர் கவர்ச்சியா? காமெடியா? என்று கேட்டு வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்த நடிகையை சன் டிவியின் ரோஜா சீரியலில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அந்த நடிகையின் கேரக்டர் கவர்ச்சியா? காமெடியா? என்று கேட்டு வருகின்றனர்.
சன்டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகிவரும் சீரியலை டி.ஆர்.பி.யில் நம்பர் 1 இடத்தில் தக்கவைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்த நடிகையை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ரசிகர்கள், சீரியலில் நடிகர் வடிவேலுவின் ஜோடி நடிகையின் கேரக்டர் கவர்ச்சியா? காமெடியா? என்று கேட்டு வருகின்றனர்.
Advertisment
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் மக்களின் முதல் விருப்பம் பெரும்பாலும் சீரியல்களாகவே இருந்து வருகிறது. இந்தப் போக்கில் இதுவரை எந்த பெரிய மாற்றமும் நடந்துவிடவில்லை. அதனால்தான், அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் முதலில் தொடங்கப்பட்ட தனியார்தொலைக்காட்சியான சன் டிவி தொடங்கப்பட்டு 28 ஆண்டுகளில் அதனுடைய பலமே சீரியல்தான் என்பதை அதன் நிகழ்ச்சிகள் நிரூபித்து வருகின்றன.
தற்போதும் கூட தினமும் 15க்கும் மேற்பட்ட சீரியல்களை ஒளிபரப்பிவரும் சன் டிவியில், பல மாதங்களாக டி.ஆர்.பி. டாப்பில் இருந்தது சீரியல் என்றால் அது ரோஜா சீரியல்தான். சன் டிவியில் இரவு 9 மணி முதல் 9.30 வரை ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில், கர்நாடகாவை சேர்ந்த நடிகர் சிபு சூர்யன் ஹீரோவாகவும் ஹீரோயினாக ரோஜா கதாபாத்திரத்தில் ஆந்திராவை சேர்ந்த நடிகை பிரியங்கா நல்கார் நடித்து வருகிறார்கள்.
Advertisment
Advertisements
ஆனால், சமீப வாரங்களாக ரோஜா சீரியலைத் தாண்டி கயல் சீரியல் மேலே வந்துள்ளதால், ரோஜா சீரியலை டி.ஆர்.பி.யில் மீண்டும் முதலிடத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக, சீரியல் குழுவினர் புதிய கேரக்டரை அறிமுகம் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்தனர்.
அதன்படி, ரோஜா சீரியல் குழுவினர், புதிய கேரக்டராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் நடிகர் வடிவேலுவின் ஜோடியாக நடித்த நடிகை சோனாவை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ரசிகர்கள் பலரும் நடிகர் வடிவேலுவின் ஜோடிக்கு சீரியலில் சிறப்பு கேரக்டர் ஏதாவது உருவாக்கப்பட்டுள்ளதா? சோனாவுக்கு கவர்ச்சி கேரக்டரா இல்லை காமெடி கேரக்டரா என்று ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரோஜா சீரியலை சுவாரசியமாக்க வரும் சோனாவுக்கு என்ன கேரக்டர் என்பது அவர் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகும்போதுதான் தெரியவரும் அதுவரை காத்திப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"