Sun TV Serial; உயிருக்கு ஆபத்தான நிலையில் அனு… கைதாகும் ரோஜா

Sun TV Roja serial today episode anu life in danger: உயிருக்கு ஆபத்தான நிலையில் அனு… ரோஜாவை கைது செய்ய வைக்கும் மாணிக்கம் இன்றைய எபிஷோடில்…

Sun TV Roja serial today episode anu life in danger: உயிருக்கு ஆபத்தான நிலையில் அனு… ரோஜாவை கைது செய்ய வைக்கும் மாணிக்கம் இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Sun TV Serial; உயிருக்கு ஆபத்தான நிலையில் அனு… கைதாகும் ரோஜா

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

மண்டபத்தின் மாடிக்கு செல்லும் அனுவை துரத்துகிறாள் ரோஜா. அங்கு அனுவிடம் ரிமோட்டை கேட்க, நீயும் போய் சாவு என சொல்லி ரிமோட்டை கொடுக்க மறுக்கிறாள் அனு. ரிமோட்டை பறிக்க அனுவிடம் ரோஜா சண்டையிடுகிறாள். அப்போது எதிர்பாராவிதமாக, மாடியில் இருந்து கீழே விழப்போக, ரோஜா அனுவின் கையைப்பிடித்து, காப்பாற்ற முயற்சிக்கிறாள். ரோஜா அனுவை காப்பாற்ற முயற்சிப்பதை, கீழே இருந்து பார்க்கிறார் மாணிக்கம். அனு மேலே ஏற முயற்சிக்கையில் கீழே காரின் மீது விழுந்து விடுகிறாள். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கும் அனுவை ஓடி வந்து தூக்குகிறார் மாணிக்கம்.

publive-image

Advertisment
Advertisements

ரிமோட்டை எடுத்துக் கொண்டு அர்ஜூனை காப்பாற்ற கீழே வருகிறாள் ரோஜா. அனு கீழே விழுந்த சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வருகின்றனர். பாட்டி வந்து என்ன ஆச்சு என கேட்கிறாள். ரோஜா அனுவிடம் வர, அனு ரோஜா, ரோஜா என மயக்கத்தில் கூறுகிறாள். பாட்டி அனுவை என்ன பண்ண என ரோஜாவிடம் கேட்க, நா எதுவும் பண்ணலை என அழுகிறாள். அனு ரோஜா என கூறியவாறே மயக்கமாகிறாள். மாணிக்கம் நீ தான் அனுவை தள்ளிவிட்ட என ரோஜா மீது குற்றம் சுமத்துகிறார். பாட்டியோ என் அனுவை கொன்னுட்டியே என ரோஜா அடிக்கப் பார்க்கிறாள். பின்னர் மாணிக்கத்திடம் போலீசுக்கு போன் செய்ய சொல்கிறாள்.

publive-image

தீயில் இருந்து தப்பித்து வரும் அர்ஜூன் ரோஜாவை தேடுகிறான். பின்னர் ரோஜாவிடம் வரும் என்ன நடந்தது என கேட்கிறான். நடந்ததை ரோஜா சொல்கிறாள். கல்பனா அர்ஜூனுக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி கேட்க, அனு தான் தீ விபத்து ஏற்படுத்தியாக சொல்கிறான். ஆனால் பாட்டி இரண்டு நல்ல கதை சொல்றீங்க என, போலீசிடம் ரோஜாவை கைது செய்ய சொல்கிறாள். அப்போது, மாணிக்கமும் ரோஜா அனுவை கீழே தள்ளிவிட்டதை பார்த்ததாக சொல்கிறார். அங்கு வந்த ஜட்ஜிடம் ரோஜாவை கைது செய்யவும் சொல்கிறார். உடனே அர்ஜூன் ரோஜா மீது தவறில்லை என வாதாடுகிறான். அப்போது சந்திரகாந்தா ரோஜாவை வீட்டுக்கு கூப்பிட்டு போக சொல்ல, உடனே மாணிக்கம், ரோஜாவை காப்பாற்ற முயற்சிக்காதீங்க என எச்சரிக்கிறார்.

publive-image

அப்போது ஆம்புலன்ஸ் வந்து அனுவை ஏற்றி செல்ல, ரோஜாவை கைது பண்ணா தான் அனுவை நான் கூட்டிட்டு போவேன் மாணிக்கம் தடுக்கிறார். பின்னர் போலீஸ் வந்து ரோஜாவை கைது செய்கிறது. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial Roja Serial Today Episode

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: