சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
செண்பகத்தின் காலில் விழுந்து ரோஜாவும் அர்ஜூனும் ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். பின்னர் அவர்களை அம்மன் சன்னதிக்கு வர சொல்லிவிட்டு, அங்கு செல்கிறார் செண்பகம். அனு அங்கு ரவுடிகளுடன் வரவே, தப்பித்து செல்கிறார் செண்பகம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/r1.jpg)
அம்மன் சன்னதியில் செண்பகம் இல்லாததால், அவரை தேட ஆரம்பிக்கிறார்கள். செண்பகம் கொடுத்த தட்டு மட்டுமே அங்கு இருக்கிறது. அது குறித்து பூசாரியிடம் கேட்டபோது, அம்மன் தான் இப்படி அவர் உருவில் வந்திருக்கிறார் என்கிறார். இதைக்கேட்டு பரவசமடைகிறாள் ரோஜா.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/r2.jpg)
அடுத்து, கெட்ட கனவு கண்டதால் பயந்து நிற்கும் ரோஜாவிடம், என்ன விஷயம் என கேட்கிறான் அர்ஜூன். ஜெயில் இருப்பதுபோல் கனவு கண்டதாக ரோஜா சொல்ல, அவளை சமாதனப்படுத்துகிறான் அர்ஜூன்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/r3.jpg)
அடுத்ததாக திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது. அப்போது ரோஜாவை அலங்கரிக்க, அழைத்து செல்கிறார் கல்பனா. கூடவே அர்ஜூன் செல்கிறான். அப்போது அங்கு வரும் அனு ரோஜாவுக்கு நானும் அலங்காரம் செய்து விடுகிறேன் என்கிறாள். உடனே, அர்ஜூன் இந்த ரூமில் நாம் ஜாக்கிரதையாக இருக்கனும். ஏன்னா இதை அனுவும் பாட்டியும் ரெடி பண்ணிருக்காங்க என்கிறான்.
அப்போது அங்கு வரும் அன்னபூரணி பாட்டி, அர்ஜூனிடம் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க என கேட்க, அனுவும் நீங்களும் சேர்ந்து முதலிரவு அறையில் கேமரா எதுவும் வச்சிருக்கீங்களானு பார்க்க வந்தேன். ஏன்னா இந்த மாதிரி சீப்பான ஐடியாவெல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் தான் வரும் என்கிறான் அர்ஜூன். உடனே பாட்டி, நான் எல்லாத்தையும் மறந்துட்டு, மாறிவிட்டதாகவும், அர்ஜூனுக்காக சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டதாகவும் சொல்லவும், அர்ஜூன் நம்பாமல் ஆச்சரியப்படுகிறான். கல்பனா ரோஜாவை அலங்கரிக்க ஆரம்பிக்கிறாள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/r5.jpg)
ரோஜாவுடன் தனியாக இருப்பதற்காக பாட்டி கூப்பிடுவதாக கூறி அம்மாவை வெளியே அனுப்பிட்டு ரொமான்ஸ் செய்கிறான் அர்ஜூன். வெளியில் அனுவிடம் ரிமோட்டை கொடுக்கிறார் மேனேஜர். அந்த ரிமோட் மூலம் அர்ஜூனின் அறையில் தீ விபத்து ஏற்படுத்த திட்டம் போட்டிருக்கிறாள் அனு. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil