சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
அர்ஜூன், ரோஜாவின் திருமண வரவேற்பு தொடங்கியது. ஆனால் ரோஜாவை மேக்கப் போட விடாமல் ரொமன்ஸ் செய்கிறான் அர்ஜூன். ஆனால் எல்லாம் நல்லபடியா நடக்க வேண்டும் என இன்று விரதம் இருப்பதாக கூறுகிறாள். அப்போது நீ பசியோடு இருக்க கூடாது என ரோஜாவுக்கு சாக்லேட் கொடுக்கிறான் அர்ஜூன். பின்னர் அர்ஜூனை வெளியே அனுப்புகிறாள் ரோஜா.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/r1-1.jpg)
அடுத்ததாக, டென்ஷானாக இருக்கும் அனுவிடம் வந்து ரிமோட்டை தருகிறார் மேனேஜர். மேலும் ரிமோட்டை அழுத்தினால் முதலிரவு அறை தீப்பிடித்து விடும் என்றும் அந்த அறைக்கதவை திறக்க முடியாது என்றும் அந்த அறையில் உள்ளவர்கள் தீயில் கருகி செத்துவிடுவார்கள் என்றும் கூறுகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/r2-1.jpg)
பின்னர் மேனேஜரை அனுப்பிவிட்டு, டைகர் மாணிக்கத்துக்கு போன் செய்கிறாள் அனு. அவர் ரிசப்ஷனுக்கு வர பிடிக்கவில்லை என கூற, பாட்டி அனுபவம் உள்ளவங்க, அதான் அர்ஜூன் கிட்ட நடிச்ச என்னை ஜெயிலிலிருந்து வெளியே எடுத்துருக்காங்க, இப்ப அர்ஜூன் ரோஜா முதலிரவை தடுக்கவும் பிளான் போட்டுருக்காங்க, என வர சொல்கிறாள் அனு.
ரிசப்ஷனுக்கு எல்லோரும் வர தொடங்கிவிட்டார்கள். அர்ஜூனுக்கு உதவிய போலீஸ் அதிகாரியும் வருகிறார். அவரைப் பார்த்ததும் அனு டென்ஷனாக, பாட்டி அவளை சமாதானப்படுத்துகிறாள். அங்கு நீதிபதி வர, அவரை வரவேற்கிறான் அர்ஜூன். எல்லோரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்க, அனு பொறாமையோடு பார்க்கிறாள்.
பின்னர், அர்ஜூன் ரோஜாவை கண்ணை மூடி மண்டபத்துக்கு வெளியே அழைத்து செல்கிறான். ரோஜா கண்ணை திறந்து பார்க்கும்போது, ரோஜாவின் அப்பா சாந்தமூர்த்தி நிற்கிறார். அவரைப் பார்த்ததும், மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள் ரோஜா. பின்னர் இந்த சர்ப்ரைஸூக்கு அர்ஜூனுக்கும், தன்னை வளர்த்ததற்காக சாந்தமூர்த்திக்கும் நன்றி சொல்கிறாள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/r4.jpg)
பின்னர் டைகர் மாணிக்கம் ரிசப்ஷனுக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் கல்பனா ஆச்சரியத்துடன், அர்ஜூன் ரோஜாவை அவரிடம் அழைத்துச் செல்கிறாள். அர்ஜூனுக்கு வாழ்த்து சொல்லும் டைகர் மாணிக்கம், வீட்டில் சண்டை போட்ட பிறகும் எப்படி பங்ஷனுக்கு வந்தேனு நினைக்குறீங்களா, அது தப்பு மனசுல பட்டது அதான் வந்துட்டேன் என சொல்கிறார். பின்னர் அனு அங்கு வர, அனுவை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்ததற்கு அர்ஜூனுக்கு நன்றி சொல்கிறார். பின்னர் அனு டைகர் மாணிக்கத்தை தனியாக கூட்டிச் சென்று, நீங்க கெத்தா இருங்க என்கிறாள். அதற்கு அவர் இந்த பங்ஷன் நல்லா நடக்க கூடாதுனு தான் நான் இங்க வந்துருக்கேன் என்கிறார். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil