By: WebDesk
Updated: November 16, 2019, 12:14:18 PM
Run Serial Sun TV
Tamil Serial News : சில மாதங்களுக்கு முன்பு ‘ரன்’ சீரியலின் ஒளிபரப்பைத் தொடங்கியது சன் டிவி. இதில் சக்தியாக தெய்வமகள் கிருஷ்ணாவும், திவ்யாவாக சரண்யாவும் நடித்து வந்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த ஜோடி மாறியிருக்கிறது.
ரன் சீரியல்
நடிகர் கிருஷ்ணாவை வைத்து விகடன் டெலிவிஸ்டாஸ் ’ரன்’ சீரியலை தயாரித்து, சன் டிவியில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது. இதில் ஹீரோயினாக நடித்து வரும் சரண்யா, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் அறிமுகமானவர். தற்போது அத்தொலைக்காட்சியின் ‘ஆயுத எழுத்து’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதற்கு முன் கிருஷ்ணாவும், வாணி போஜனும் நடித்த ‘தெய்வமகள்’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. விளம்பரங்கள், கடை திறப்பு விழாக்கள் போன்றவற்றிலும் இவர்கள் கலந்துக் கொண்டார்கள். சீரியலில் பிஸியான கிருஷ்ணா, தனது காதல் மனைவி சாயாசிங்குடன் நேரம் செலவிட முடியாமல் தவித்தார். இதனால் இருவருக்கும் சில மனக்கசப்புகளும் வந்து போயின.
கிருஷ்ணா – சாயா சிங்
தெய்வமகள் முடிந்த நிலையில், தற்போது ரன் சீரியலில் நடித்து வருகிறார் கிருஷ்ணா. இவருக்கு ஜோடியாக நடித்து வந்த சரண்யா, தாய்வீடான விஜய் டி.வி-க்கு திரும்பி விட்டார். அதனால், ரன் சீரியலில் வேறு ஒருவர் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். அது வேறு யாருமல்ல, கிருஷ்ணாவின் நிஜ ஜோடியான சாயா சிங் தான்! ரியல் ஜோடிகளின் நடிப்பை திரையில் காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.