’சின்னத்தம்பி நந்தினி’யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!

Rasathi Serial – Pavani Reddy: அந்த சீரியலில் முதன்மையான கதாபாத்திரத்தில் பவானி ரெட்டி நடிக்கிறார்.

Rasathi Serial sun tv
ராசாத்தி சீரியல்

Rasathi Serial: தமிழ் சீரியல்களை ஒவ்வொரு வீட்டுக்கும் நெருக்கமாகக் கொண்டு சென்றது சன் டிவி தான். அதைப் பின்பற்றி மற்ற சேனல்களும் மெகா தொடர்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இப்படி சீரியல் உலகில் தனியாக முத்திரை பதித்திருக்கும் சன் டிவி வெவ்வேறு கதைகளத்தில் பல புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தும். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது.

’ராசாத்தி’ என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த சீரியலில் முதன்மையான கதாபாத்திரத்தில் பவானி ரெட்டி நடிக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். நந்தினி என்ற கதாபாத்திரத்தில், தொலைக்காட்சி ரசிகர்கள் மனதை வெகுவாகவும் கவர்ந்தார். வயதாகி விட்டாலும், நடிப்பில் எப்போதுமே இளமையைப் பின்பற்றும் விஜயக்குமாரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு சன் டிவி-யின் தங்கம், வம்சம், நந்தினி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை விசித்ராவும் நடிக்கிறார். இவர் கவுண்டமணி – செந்தில் ஆகியோருடன் இணைந்து பல காமெடிகளில் நடித்தவர்.

டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க:

ராசாத்தி ப்ரோமோவை வெளியிட்ட சன் டிவி, அது ஒளிபரப்பாகும் தேதியை சொல்லாமல், விரைவில் என்று குறிப்பிட்டு வந்தது. அதனால் விரைவில் வேறு ஏதோ சீரியல் முடிவுக்கு வருமென தெரிகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv s new serial titles as rasathi pavani reddy

Next Story
அஜித் படங்களின் போலியான பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்: ஒன்று கூடிய ரஜினி, விஜய் ரசிகர்கள்…Vijay Rajinikanth fans against ajith
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com