சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் விஜித் ருத்ரன் இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் திருமண பந்தத்தில் லாக் ஆகியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் வரை பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பொது முடக்க காலத்தில் 50க்கும் குறைவான நபர்கள் கலந்துகொள்ள திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் பிரபலங்களின் திருமணங்களும் அதே போல, கூட்டம் அதிகம் இல்லாமல் மணமகன், மணமகள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என எளிமையாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் திருமணங்கள், நிச்சயதார்த்தங்களின் புகைப்படங்களை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், சன் டிவியில் கிருஷ்ணா சாயா சிங் நடித்து பிரபலமான ரன் சீரியலில் வில்லனாக நடித்தவர் நடிகர் விஜித் ருத்ரன். இந்த சீரியலில் வில்லனாக நடித்ததன் மூலம் விஜித் ருத்ரன் டிவி சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. விஜித் ருத்ரன் தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் புகைபடத்தை லைக் செய்து பகிர்ந்ததால் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தனது திருமணப் புகைப்படம் குறித்து விஜித் ருத்ரன், குறிப்பிடுகையில், “உங்கள் அனைவருடைய ஆசிர்வாதங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. அது இந்த நாளை இன்னும் சிறப்பாக்கியுள்ளது. உங்கள் அன்பை தொடர்ந்து அளியுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று முன் தினம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் கதிரின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் இதே போல வைரல் ஆனது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"