Advertisment

'உனக்கு நான்; எனக்கு நீ': 2 மாத குழந்தையுடன் ஷூட்டிங் போகும் 'செவ்வந்தி' சீரியல் நடிகை திவ்யா

2 மாத குழந்தையுடன் சூட்டிங் செல்லும் சீரியல் நடிகை திவ்யா; வைரல் வீடியோ

author-image
WebDesk
May 23, 2023 22:42 IST
New Update
Dhivya Sridhar

நடிகை திவ்யா

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா 2 மாத கைக்குழந்தையுடன் சூட்டிங் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவர் தன்னுடன் நடித்த அர்ணவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். திவ்யாவின் வீட்டில் சம்மதிக்காத நிலையிலும், மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: அம்மா மரணம்; துயரத்தில் துடிக்கும் நடிகை பவித்ரா லட்சுமி

publive-image

சில காலம் கழித்து கர்ப்பமாக இருப்பதாக அர்ணவிடம் திவ்யா கூறியுள்ளார். ஆனால் அர்ணவ் குழந்தை வேண்டாம் என்று கூறியுதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் திவ்யா வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்தநிலையில், திவ்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.

publive-image

தற்போது குழந்தை பிறந்து 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில் திவ்யா மீண்டும் சூட்டிங்கிற்கு சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள திவ்யா, “அவள் (அம்மா) செய்யாத வேலையோ, அவள் விரும்பாத பணியோ, முத்தமிடாத குழந்தையோ இல்லை. வேலைக்குச் செல்லும் அம்மா எல்லாவற்றையும் செய்கிறாள். மீண்டும் வேலைக்குச் செல்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் உங்களின் வாழ்க்கை இனியாவது நன்றாக அமையட்டும் எனப் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment