தமிழ் தொலைக்காட்சிகளில் ஹிரோயின்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஹீரோயின் அளவுக்கு வில்லிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். அதனால், நடிகைகள் பலரும் வில்லி வேடத்தை விரும்பி செல்கிறார்கள். தமிழ் டீவி சீரியல்களில் இப்போது இதுதான் டிரெண்ட் ஆக இருக்கிறது.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சிகளுக்கு நிகராக நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி முன்னணி சேனலாக இருந்து வருகிறது கலர்ஸ் தமிழ் டிவி.
பொதுவாக பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களூம்தான் அதிகமாக ஒளிபரப்பை ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் கலர்ஸ் தமிழ் டிவியும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் தனி ரசிகர்களைப் பெற்றுள்ளது.
கலர்ஸ் தமிழ் சேனலில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ‘சில்லுனு ஒரு காதல்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சன் டிவி சீரியல் நடிகை துர்காஸ்ரீ இந்த சீரியலில் புதிதாக இணைந்து உள்ளார். இவர், ஏற்கெனவே அம்மன், மாங்கல்ய சந்தோஷம், இதயத்தை திருடாதே, அபி டெய்லர் உள்ளிட்ட பல வெற்றி கரமான சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்த நிலையில்தான், இவர் கலர்ஸ் தமிழ் டிவியில் இரவு 10 மணிக்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் இணைந்துள்ளார். சில்லுனு ஒரு காதல் சீரியல் ரசிகர்களின் ஆதரவு பெற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் மஹா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை துர்கா ஸ்ரீ, சில்லுனு ஒரு காதல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சீரியலில் பிஸியாக இருந்தாலும் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கும் துர்காஸ்ரீ, நடிகை மட்டுமல்ல, இவர் ஒரு நடனக் கலைஞரும்கூட… கலர்ஸ் தமிழ் டிவியின் சில்லுனு ஒரு காதல் சீரியலில் இணைந்துள்ளது குறித்து துர்காஸ்ரீ ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். சில்லுனு ஒரு காதல் சீரியலில் துர்காஸ்ரீ அப்படி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறாஅர் என்றால், வில்லியாக நடிக்க வந்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் ஹிரோயின்களை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஹீரோயின் அளவுக்கு வில்லிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். அதனால், நடிகைகள் பலரும் வில்லி வேடத்தை விரும்பி செல்கிறார்கள். தமிழ் டீவி சீரியல்களில் இப்போது இதுதான் டிரெண்ட் ஆக இருக்கிறது.
நடிகை துர்காஸ்ரீ ‘சில்லுனு ஒரு காதல்’ படப்பிடிப்பு தளத்தில் சீரியல் ஹீரோ சமீர் அகமது மற்றும் ஹீரோயின் நடிகை தர்ஷினி கவுடாவுடன் எடுத்து கொண்ட செல்ஃபிக்களை பதிவிட்டுள்ளார். அதில், துர்காஸ்ரீ “ஹாய் நான் துர்கா, சில்லுனு ஒரு காதல் சீரியலில் நிஷா என்ற வில்லி கேரக்டரில் நடிக்க புதிதாக இணைந்துள்ளேன். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தினமும் இரவு 10 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் என்னைப் பாருங்கள். நான் நடிக்கும் எபிசோட்களை தவறாமல் பார்த்து தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்துள்ளார்.
‘சில்லுனு ஒரு காதல்’ சீரியலில் துர்காஸ்ரீ முக்கிய வில்லன் நாகாவின் மகளாக வில்லி நிஷா கதாபாத்டிரத்தில் நடிக்கிறார். நடிகை துர்கா ஸ்ரீ நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்திய டீசரில் ஹீரோயின் கயல் பயிற்சி பெரும் போலீஸ் பயிற்சி அகாடமியில் இருக்கும் நிஷா, மோதிரத்தை திருடிய பழியை போடும் சதி வேலையில் இறங்குவது தொடர்பான வீடியோவை துர்காஸ்ரீ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“