உடலில் மலைப் பாம்பை நெளிய விட்டபடி டான்ஸ்: சன் டிவி சீரியல் நடிகை 'த்ரில்' வீடியோ
எதையும் வித்தியாசமாக செய்ய முயலும் கேப்ரியெல்லா செல்லஸ் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கும் வித்தியாசமாக பூர்வகுடிம் மகளாக கழுத்தில் மலைப்பாம்புடன் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
சன் டிவியில் சுந்தரி சீரியலில் சுந்தரியாக கலக்கிவரும் நடிகை கேப்ரியெல்லா செல்லஸ் சமூக ஊடகங்களில் பிரபலமான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு முகத்தில் வண்ணங்களைப் பூசி மலைப் பாம்பை கழுதில் நெளியவிட்டபடி பூர்வகுடி மகளாக ஆடிய நடன வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
நடிகை கேப்ரியெல்லா செல்லஸ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் பிரதமாதமாக நடித்து கலக்கி வருகிறார். நடிகை என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிகளை உடைக்கும் விதமாக கேப்ரியெல்லா இந்த சீரியலில் கருப்புதான் அழகு என்பதை பறைசாற்றும் விதமாக அவர் ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினராக கருதும் வகையில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
மைம் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த கேப்ரியெல்லா செல்லஸ் நடிகையாக மாறினார். அம்புலாலி, கொல்லி, வேம்பா உள்ளிட்ட பல குறும்படங்களில் நடித்த கேப்ரியெல்லா செல்லஸ் 2019ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இயக்குனர் கே.எம்.சர்ஜன் இயக்கத்தில் ஐரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதுமட்டுமில்லாமல், கேப்ரியெல்லா செல்லஸ் பாசமலர் உள்ளிட்ட வெப் சீரிஸ் களிலும் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் முக்கிய கதாபாத்திரமான சுந்தரியாக நடித்து வருகிறார். இவருடைய இயல்பான தோற்றம் நடிப்பு ரசிகர்கள் அவரை நெருக்கமாக உணரவைத்துள்ளது.
இந்த நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில், அவருடைய மகள் தீ, தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு கேப்ரியெல்லா செல்லஸ் வித்தியாசமாக முகத்தில் வண்ணங்களைப் பூசிக்கொண்டு கழுத்தில் மலைப்பாம்பை நெளியவிட்டபடி பூர்வகுடி மகளைப் போல நடனம் ஆடியுள்ளார்.
நடிகை கேப்ரியெல்லா செல்லஸ் முகத்தில் வண்ணங்களைப் பூசிக்கொண்டு கழுத்தில் மலைப்பாம்பை நெளியவிட்டபடி ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்ப்பதற்கு த்ரில்லிங்காக இருப்பதாக ரசிகர்கள் கம்மெண்ட் செய்துள்ளனர். எதையும் வித்தியாசமாக செய்ய முயலும் கேப்ரியெல்லா செல்லஸ் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கும் வித்தியாசமாக மலைப்பாம்புடன் நடனம் ஆடி கவனத்தைப் பெற்றுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"