சன் டிவி சீரியல் நடிகை வீட்டில் சோகம்: ஈடுசெய்ய முடியாத இழப்பு என உருக்கம்

பிரபல சீரியல் நடிகை நிஷா தனது பாட்டி உடல்நலக் குறைவால் காலமானதால் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் தனது பாட்டியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

sun tv serial actress nisha, actress nisha's grandmother passes away, சன் டிவி சீரியல் நடிகை நிஷா, சீரியல் நடிகை நிஷாவின் பாட்டி மரணம், சீரியல் நடிகை நிஷா சோகம், ரசிகர்கள் இரங்கல், நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், deepest condolence to nisha, serial actress nisha, nisha very sad, kana kanum kaalangal serial nisha, tamil tv serial actress news

பிரபல சீரியல் நடிகை நிஷாவின் பாட்டி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததால் சோகத்தில் மூழ்கியுள்ள நடிகை நிஷா, தனது பாட்டியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பைப் பெற்ற கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமானவர் நடிகை நிஷா, இவர் தொடர்ந்து, சன் டிவியில் வள்ளி, தெய்வமகள், ஆகிய சீரியல்களிலும் மஹாபாரத்தித்தில் திரௌபதியாகவும் நடித்தார். அதே போல, விஜய் டிவியில் ஆஃபிஸ், சரவணன் மீனாட்சி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய சீரியல்களிலும் ஜீ தமிழ் டியிவில் தலையணை பூக்கள் சீரியலிலும் நடித்தார்.

நடிகை நிஷா டிவி சீரியல்களில் மட்டுமல்லாமல், இவன் வேறமாதிரி, நான் சிகப்பு மனிதன், என்ன சத்தம் இந்த நேரம், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, வில் அம்பு ஆகிய திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என 3 டிவிகளின் சீரியல்களிலும் நிஷா நடித்திருந்தாலும் சன் டிவி சீரியல் நடிகையாகவே அறியப்படுகிறார். பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்த நிஷா பிரபல திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில்தான், சீரியல் நடிகை நிஷா தனது பாட்டி கமலா உடல்நலக் குறைவால் காலமானதால் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் தனது பாட்டியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நடிகை நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “என்னுடைய வாழ்க்கையில் நிரப்பமுடியாத ஒருவரை இழந்துவிட்டேன். என்னுடைய கமலா பாட்டி அவர் நன்றாக சமைப்பவர், நல்ல அரவணைப்பவர், நல்ல ஆசிரியர், நல்ல நகைச்சுவையாளர், சிறந்த தோழி. உங்களுடைய இழப்பை வேற யாராலும் நிரப்ப முடியாது. என்னுடைய செல்ல பாட்டி அமைதியடையுங்கள்…” என்று தெரிவித்துள்ளார்.

நிஷாவின் பாட்டியின் மறைவால் அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தனது பாட்டியின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ள நடிகை நிஷாவுக்கு சின்னத்திரை துறையினர், ரசிகர்கள் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். நிஷாவின் கணவரும் பிரபல திரைப்பட நடிகருமான கணேஷ் வெங்கட்ராமனும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv serial actress nishas grandmother passes away

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com