ரொமான்ஸ் வீடியோ: காதலரை கெத்தாக அறிமுகம் செய்த சன் டிவி சீரியல் நடிகை!

சன் டிவி சீரியல் நடிகை சஹானா, இன்ஸ்டாகிராமில் தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு இவர்தான் தனது காதலர் என்று வெளியுலகத்திற்கு கெத்தாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

Sun TV Serial actress Sahana, Sahana introduces lover to fans, சன் டிவி, சீரியல் நடிகை சஹானா, சீரியல் நடிகை சஹானா, காதலரை அறிமுகப்படுத்திய நடிகை சஹானா, சஹானா வைரல் வீடியோ, actress Sahana video, actress Sahana viral video, Sahana introduces her lover, actress Sahana, tamil viral video news

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘அழகு’ சீரியல் நடிகை சஹானா ஒரு ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்டு தனது காதலரை வெளியுலகத்திற்கு கெத்தாக அறிமுகம் செய்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு டஜனுக்கு மேலான முழு நேர பொழுதுபோக்கு டிவி சேனல்கள் பெருகிவிட்ட சூழலில், எல்லா டிவி சேனல்களும் பார்வையாளர்களை சேனலை மாற்றாமல் தங்கள் டிவியிலேயே கட்டிப்போடுவதற்கு டிவி சீரியல்களை கையில் எடுத்துள்ளன. தமிழ் டிவி சீரியல்களில் சன் டிவி சீரியல்களுக்கு என ஒரு தனியான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ‘அழகு’ சீரியல் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி அண்மையில் நிறைவடைந்தது.

சன் டிவியின் ‘அழகு’ சீரியலில் நடிகை ரேவதி, தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இவர்களுடன், ஸ்ருதி ராஜ், விஜே சங்கீதா, லோகேஷ் பாஸ்கரன் என பலர் நடித்தனர். அழகு சீரியலில் ரேவதியின் மகளாக நடிகை சஹானா நடித்தார். ஆனால், சஹானா அழகு சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி வெளியேறினார்.

அழகு சீரியலில் இருந்து சஹானா ஏன் விலகினார் என்று கேள்விகள் எழுந்தபோது, இந்த சீரியலில் நடிப்பதற்கு முதலில் இயக்குனர்கள் என்னிடம் நடிகை ரேவதிக்கு லீடு கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளீர்கள் என்று சொல்லி நடிக்க வைத்தார்கள். உங்கள் கேரக்டருக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால், பல எபிசோடுகள் சென்ற பிறகும், சீரியலில் எனது கேரக்டர் எனக்கே ரொம்ப போரடிக்கிற மாதிரி இருந்தது. அதனால், இந்த சீரியலில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், நடிகை சஹானா, இன்ஸ்டாகிராமில் தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு இவர்தான் தனது காதலர் அபிஷேக் என்று வெளியுலகத்திற்கு கெத்தாக அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், சஹானா காதலர் அபிஷேக் உடன் இருக்கும் ரொமான்ஸ் ஒரு ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் சஹானாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சஹானா தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் ரொமான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv serial actress sahana introduces lover to fans

Next Story
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எண்ட் கார்டு ? பிரபல நடிகை கொடுத்த விளக்கம்pandian stores serial ending soon, vijay tv pandian stores, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா பதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிகிறதா, pandian stores serial actress hema answers, pandian stores serial news, tamil news, hema rajkumar, hema rajsathish, tamil tv serial news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com