சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் கதாநாயகி ஸ்வேதாவிற்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
சன் டிவி சீரியலில் கடந்த 8 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பந்தேகர். இந்தச் சீரியலில் நடித்ததன் மூலம், அவரது நிஜப்பெயரை விட சந்திரலேகா சீரியல் சந்திரா என்று சொன்னால் ரசிகர்களுக்கு தெரியும் அளவிற்கு புகழ்பெற்றார்.
/indian-express-tamil/media/post_attachments/e708d364-9c0.jpg)
ஸ்வேதா சென்னையில் உள்ள வி.எம் கல்லூரியில் பொருளியல் படிப்பு படித்தவர். ஆரம்பத்தில் காலேஜ் முடித்ததும் விளம்பர படங்களில் நடித்து வந்திருக்கிறார். அதற்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இவர் அஜித்தின் ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். பின்னர் வள்ளுவன் வாசுகி சத்யா படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியலின் மூலமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு சந்திரலேகா, நிலா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/2a944979-f88.jpg)
இந்த நிலையில் கடந்த வருடம் ஸ்வேதாவுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கர்ப்பமான ஸ்வேதா, அது குறித்து தனக்கு கஷ்டமாக இருப்பதாகவும் வெளியே சொல்லுவதற்கு வெட்கமாக இருந்தது என்றும் பேட்டியில் கூறியிருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/48ba5fea-b80.jpg)
இந்த நிலையில் தற்போது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு குழந்தை ஆண் குழந்தை, ஒரு குழந்தை பெண் குழந்தை. இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்வேதா தனது குழந்தைகளின் கைகளை புகைப்படங்களாக வெளியிட்டு, ”ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதியம் நாங்கள் மால் மற்றும் சொப்னா என்ற இரண்டு முழு நிலவை கண்டோம். ஆனால் எங்களுடைய நிலவுகள் ஒரே மாதிரியானவை இல்லை (கலப்பு இரட்டையர்கள்). இரண்டு நிலவும் நல்ல பிரகாசமாக உள்ளன. அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் வாழ்த்துக்களாலும், ஆசீர்வாதங்களாலும் நட்சத்திரங்கள் போல பிரகாசிக்கிறார்கள். நாங்கள் இரண்டு சிறிய, ஒரே மாதிரி இல்லாத நிலவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். கடவுள் மற்றும் எங்களுடைய நலம் விரும்பிகளுக்கு நன்றி. அன்பின் உலகிற்கு அந்த நிலவை வருக என்று வரவேற்கிறோம். நீங்கள் என்ன பார்க்க வேண்டும், நீங்கள் என்ன நினைக்க வேண்டும் மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்! அன்பைப் பார்க்கவும், சேவையைப் பற்றி சிந்திக்கவும், மனிதகுலத்திற்கு சிறந்ததைச் செய்யவும். அன்புடன் வரவேற்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“