அருந்ததி: பழி வாங்க வந்த ஆவிக்கு ஹனிமூன் ஆசைய தூண்டி விட்டுருக்கீங்களே?

Arundhathi Serial: தெய்வானை உடலில் புகுந்த ஆவிக்கு, தற்போது மண்டை குழம்பி, குடும்ப வாழ்க்கையில் கவனம் திரும்பியிருக்கிறது.

By: Updated: August 22, 2019, 12:11:22 PM

Sun TV’s Arundhathi Serial: ஆசை நிறைவேறாமல் இறந்தவர்கள் ஆவியாக அலைவார்கள் என சொல்வதுண்டு. இப்படியான திகில் அனுபத்தைத் தருகிறது சன் டி.வியின் ‘அருந்ததி’ சீரியல்.

ஆவியான அருந்ததி திரும்ப வர வேண்டும் என்றால், அதற்கு ஒரு உடல் வேண்டும் என்று நம்பூதிரி சொல்ல, அதற்கு தெய்வானை தன் உடலை தர சம்மதிக்கிறாள். ஆனால் அதற்கு அவளின் கணவன் சண்முகம் மறுக்கிறான். ஆகையால் சண்முகத்துக்கு தெரியாமல் தனது உடலை அருந்ததிக்கு தர சம்மதம் சொல்கிறாள் தெய்வானை. அப்படி தெய்வானை உடலுக்குள் புகுந்துக் கொண்ட அருந்ததி, சண்முகத்தின் அன்பை அனுபவித்து ரசிக்கிறது.

தன்னை சீரழித்துக் கொன்றவனை பழிவாங்க வேண்டுமென்ற சபதத்துடன் தெய்வானை உடலில் புகுந்த ஆவிக்கு, தற்போது மண்டை குழம்பி, குடும்ப வாழ்க்கையில் கவனம் திரும்பியிருக்கிறது. தெய்வானையின் கணவன் சண்முகத்தை எனக்கு சொந்தமானவனாக மாற்றி, அவனின் அன்பு, காதல், வாழக்கை எல்லாத்தையும் அவனுடன் சேர்ந்து வாழாமல் விட மாட்டேன் என்று தனக்குள் மீண்டுமொரு சபதத்தை எடுத்துக் கொள்கிறது.

தெய்வானை – சண்முகத்தை ஹனிமூனுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து பேசுவதற்காக தெய்வானையை கூப்பிடுகிறார் ஈஸ்வரி அம்மா. ஆனால் இந்த விஷயம் தெய்வானைக்கு கேட்டு விடக்கூடாது என்ற உள்நோக்கத்தில், அவள் குளிக்கும் போது கதவை வெளிப்புறமாக தாழிட்டு விட்டு வந்து ஹனிமூன் பிளான் பற்றி தெரிந்துக் கொள்கிறது அருந்ததியின் ஆவி.

பழி வாங்க வந்த ஆவிக்கு இப்போ ஹனிமூன் ஆசை வந்திருக்கு. இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ..!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sun tv serial arundhathi serial update deivanai shanmugam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X