டிஆர்பி ரேட்டிங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி, தொடர்ந்து இரண்டாவது வாரம் முன்னிலையில் இருக்கிறது சன் டிவி சீரியல்.
தொலைக்காட்சி ஒளிப்பரப்புகளில் டிஆர்பி ரேட்டிங் என்பது முக்கியமான ஒன்று. இதில் சன் டிவி சீரியல்களிலே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சமீபகாலமாக விஜய் டிவி சீரியல்கள் முன்னிலை பெற்று வந்தன. குறிப்பாக பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி போன்ற விஜய் டிவி சீரியல்கள், சன் டிவி சீரியல்களைப் பின்னுக்குத் தள்ளின.
இதைத் தவிர விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் ஆரம்பித்து விட்டால், பிக் பாஸ் தான் டிஆர்பியில் ஆதிக்கம் செலுத்தும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி-ஐ தடுக்க சன் டிவி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சியையும் கொண்டு வந்தது. ஆனால் இரண்டு நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
இதையடுத்து சன் டிவி, அதன் ஹிட் சீரியல்களுள் ஒன்றான பூவே உனக்காக சீரியலின் ஒளிப்பரப்பு நேரத்தை, பிக் பாஸ் ஒளிப்பரப்பாகும் இரவு 10 மணிக்கு மாற்றியது. சன் டிவியின் இந்த முடிவு அதற்கு நல்ல பலனைத் தந்தது.
அஸீம் – ராதிகா ப்ரீத்தி ஜோடியோடு, சாயா சிங்கும் சீரியலில் இணைந்ததால் சீரியலின் டிஆர்பி எகிறியது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த சீரியலின் டிஆர்பி பிக் பாஸ் நிகழ்ச்சியை முந்தியுள்ளது.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் டிஆர்பி ரேட்டிங்கில் பின் தங்கியிருப்பதற்கு போட்டியாளர்கள் பலரும் புதுமுகங்களாக இருப்பது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனைப் பொறுத்தவரையில், இந்த நிகழ்ச்சி நமக்கு புதுசு என்பதால், ஷோ எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலே பெரிய வெற்றியடைந்தது.
இரண்டாவது சீசனும் போட்டியாளர்கள் மற்றும் முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியால் வெற்றி அடைந்தது. அடுத்த இரண்டு சீசன்களும் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் சிலர் ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக வெற்றியடைந்துள்ளது. இந்த சீசன் 60 நாட்கள் கடந்து விட்ட நிலையில், டிஆர்பியில் பின் தங்கியிருப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனிடையே டிஆர்பியில் முன்னிலை பெற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil