Sun Tv Serial Kannana Kanne Sahana Shetty as Aparna Tamil News : தமிழ் திரையுலகில் அரூபம் என்ற திரைப்படத்தின் மூலம் தடம் பதித்தவர் நடிகை சஹானா ஷெட்டி. அழகிய கண்களும், வசீகர தோற்றத்துடன் தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும், இவளுங்க இம்ச தாங்க முடியல, இவன் ஏடாகுடமானவன் போன்ற திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் சஹானா. இவர் நடித்த சலீம் திரைப்படம் 2014-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதை வென்றது. அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு, திரை விமர்சகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisment
திரைப்படங்களில் மட்டுமில்லாது, அழகு, பகல் நிலவு, போன்ற டிவி சீரியல்களிலும், அதிர்ஷ்ட லட்சுமி, கனெக்ஷன் போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சன் டிவி முன்னனி சீரியல்களில் ஒன்றான கண்ணான கண்ணே விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அபர்ணா எனும் புதிய கேரக்டர் அறிமுகமாகிறது. நேற்றைய எபிசோடில் அறிமுகமான அபர்ணா கதாபாத்திரத்தில், மீண்டும் சன் டிவி சீரியலில் தடம் பதித்துள்ளார் நடிகை சஹானா ஷெட்டி. கண்ணான கண்னே சீரியலில் தனது எண்ட்ரி குறித்தும் அவர் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
Advertisment
Advertisements
கண்ணான கண்ணே சீரியல் கதைக் களத்தின் படி, யுவராஜின் உறவினராக அபர்ணா ரோல் இருக்கும் படி கதை எழுதப்பட்டுள்ளது. யுவராஜிக்கு பொருத்தமாக பெண் பார்க்கும் படலத்தை குடும்பத்தார் அரங்கேற்ற, அபர்ணா ரோல் அறிமுகமாகிறது. அபர்ணாவை யுவராஜிக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்துடன் யுவராஜின் பெற்றோர் இருந்து வர, அடுத்த சில நாள்களில் கண்ணான கண்ணே சீரியலில் செம்ம ட்விஸ்டுகள் சஹானாவின் கதாபாத்திரமான அபர்ணா ரோலை மையப்படுத்தி அரங்கேற இருக்கின்றது. சீரியல் ரசிகர்களுக்கு சஹானா கண்ணான கண்ணேவில் எண்ட்ரி ஆகி இருப்பதும், அபர்ணாவாக அறிமுகமாகி அடுத்த சில எபிசோடுகளில் கலக்கவிருப்பதும், இந்த லாக்டவுனின் செம்ம எண்டர்டெயிண்மெண்ட்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil