Lakshmi Stores Promo: நடிகை குஷ்பு மகா லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியல் சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. சுந்தர் சி எழுதியிருக்கும் இந்த சீரியலை, சுந்தர் கே விஜயன் இயக்கி வருகிறார்.
Advertisment
இது லட்சுமி ஸ்டோர்ஸ் எனும் துணிக்கடையை பிரதானமாக வைத்து இயக்கப்பட்டு வருகிறது. கடையில் வேலை செய்யும் பாக்கிய லட்சுமியும், கடை ஓனர் மகாலிங்கத்தின் கடைசி பையனும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். குடும்பத்தையும், கடையையும் பொறுப்பாக வழி நடத்தி வருகிறார் குஷ்பு. ஆனால் மினிஸ்டர் சகுந்தலா தேவி தொடர்ந்து இவர்களிடம் பிரச்னை செய்துக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே இன்று வெளியாகியுள்ள, லட்சுமி ஸ்டோர்ஸின் ப்ரோமோவில், ”ப்ரியா நீ பெத்த பொண்ணு கிடையாது என சகுந்தலா தேவி, விரலை நீட்டி பேச, வீடு முழுக்க ப்ரியாவின் பிறப்பு சான்றிதழை தேடுகிறாள் மகா லட்சுமி. அப்போது பள்ளியிலிருந்து வருகிறாள் ப்ரியா. யார் என்ன சொன்ன என்ன, நான் நீ பெத்த பொண்ணு என அவளை வாரி அணைக்கிறாள் மகா லட்சுமி. என்ன விடுங்க, என கையை தட்டி விடுகிறாள் ப்ரியா”
Advertisment
Advertisements
உண்மை என்ன என்பதை இன்றைய எபிசோடில் தெரிந்துக் கொள்ளலாம்.