sun tv serial:: பெண்ணைப் பெற்ற அப்பாக்களுக்கு இப்படியான விஷயத்துக்குத்தான் கோபம் வருதுன்னு யதார்த்தமா புரிஞ்சுக்க வசதியா இருக்கு சன் டிவியின் மெட்டி ஒலி சீரியலின் இந்த காட்சி. ஐந்து பெண்களை பெற்று சலிப்படையாமல்... குறிப்பாக பெண் பிள்ளைகள் என்று பாகுபாடு பார்க்காமல் மிக நன்றாகவே வளர்த்து இருக்கிறார் சிதம்பரம்.
Advertisment
இவரின் இரண்டாவது மகளுக்குத்தான் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த மாணிக்கத்தை கல்யாணம் செய்து வைக்கிறார் சிதம்பரம். ஆரம்பத்தில் மகள் சரோவின் மாமியார் அவளைப் படுத்தும் கொடுமைகள் சிதம்பரத்துக்கு தெரிய வரும்போது, கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துக்கோ சரோ.. குடும்பம்னா இப்படி சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். இதுக்கெல்லாம் கோபப்படக் கூடாது...நீ கோபப்பட்டு, நம்ம வீட்டுக்கு வந்துட்டா உனக்கு கீழே மூன்று தங்கச்சிங்க இருக்காங்க. அவங்க வாழ்க்கை என்னாகும் யோசிச்சு பார்னு சொல்லி சரோவை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.
அம்மாவுடன் சேர்த்துக்கொண்டு புருஷன் மாணிக்கமும் சரோவை அப்பப்போ கொடுமைப படுத்திக்கிட்டே இருக்காங்க. இருந்தாலும் சரோவின் மாமியாரும், புருஷனும் உஷார்...சரோவின் மாமா மூலமாக கிடைக்கும் உதவிகளை மட்டும் பயன்படுத்திக்க துடிக்கறாங்க. அப்படி ஒரு கடை விலைக்கு வருகிறது என்று தெரிந்து சரோவின் மாமா உதவியுடன் அந்த கடையை பேசி முடிக்கறாங்க.
அதுக்கு பணமும் மாமாவே தரேன்னு சொல்றார். நம்ம ஹீரோ மாணிக்கம்தான் கொஞ்சம் அப்படி இப்படியாச்சே. கையும் சுத்தமில்லை.. ஆளும் ஒழுக்கமில்லை என்று மாணிக்கத்தை முன்னாள் முதலாளி வேலையை விட்டு துரத்தி விடுகிறார். அவரை விட்டு வெளியில் வந்த மாணிக்கம், அவருக்கு எதிராகவே பல வேலைகள் செய்து இன்னொரு கடையில் வேலை பார்த்து வருகிறான். இப்படி போகையில்தான், இவன் ஒரு கடைக்கு முதலாளி ஆவதா என்று முன்னாள் முதலாளியின் மகன், மாணிக்கம் வாங்க இருந்த கடையை தான் வாங்கி விடுகிறான்.
விஷயம் தெரிஞ்ச சரோவின் மாமியார் சும்மா இருப்பாங்களா? கடை கையை விட்டு போனதற்கு சரோவின் வயிற்றில் உருவான கருதான் கரணம் என்று சீரியல், சினிமா மாமியார் போலவே பேசறாங்க. இதை பார்த்துக்கொண்டு இருக்கும் ஒரு தந்தையின் மனம் எப்படி கொதித்துப் போகும்? உடனே அந்த முன்னாள் முதலாளி வீட்டுக்கு போகிறார். எல்லாருமே அந்த அக்கதையை ஏன் விலை பேசுகினீர் என்று கேட்பார் என்று எதிர்பார்த்து இருக்க....
உம்மகிட்டே நான் ஒண்ணே ஒண்ணுதாய்யா கேட்கணும். எவ்ளோ அன்பா, அருமையா நான் பெண்ணை வளர்த்து வச்சு இருந்தேன்... நீர்தானேய்யா மாணிக்கம் ரொம்ப நல்லவன்.. குணத்தில் தங்கம்..உங்க பொண்ணை குடுங்கன்னு பெண்கேட்டு வந்தீர்...நீங்க முன்னால நின்னதுனாலதானே நான் சரோவை கட்டிக்குடுத்தேன்...
இப்போ நீரே மாணிக்கத்துக்கு கெடுதல் செய்யறேன்னு கிளம்பிட்டீர்...ஒன்னு புரிஞ்சுக்கோங்க ஐயா..நீர் கெடுதல் செய்யறது மாணிக்கத்துக்கு இல்லை..அது மூலமா என் பொண்ணுக்கு என்று சிதம்பரம் அழுகிறார். .பெண்களை பெற்ற அப்பாக்களின் மனம் போல பெண்ணுக்கு மண வாழ்ககை அமையவில்லை என்றால் அப்பாக்கள் இப்படித்தான் கண்ணீர் வடிப்பார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil