New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/0a5e7dfdc70bb11a9c42d3b124d100b2-6.jpg)
sun tv serial new episodes sun next vijay tv serial new episodes hotstar : சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். வரும் 27 ஆம் தேதி முதல் உங்கள் ஃபேவரெட் சீரியல்களின் நியூ எபிசோட்கள் ஒளிப்பரபாக உள்ளது. பழைய எபிசோடுகளை கண்டு போர் அடித்தவர்கள் இனி கவலை படாதீர்கள். அதே நேரம், அவருக்கு பதில் இவர், இவருக்கு பதில் அவர் என பல மாற்றங்களையும் சீரியலில் பார்க்கலாம் ஷாக் ஆகாதீர்கள்.
சீரியல்களுக்கு நம் தமிழ்நாட்டு மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பும், அன்பும் உண்டு. டிவி சீரியல்களும் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தன. டி.ஆர்.பி விசயத்தில் மிகுந்த கெடுபிடி என்றே சொல்லலாம்.கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன.சீரியல் படப்பிடிப்புகள் நடத்தமுடியாமல் போனதால் தொடர்ந்து வேறு வழியில்லாமல் போட்ட படங்களையே திரும்ப திரும்ப போட்டு பொழப்பை ஒட்டிக் கொண்டிருந்தது சேனல்கள்.
இந்நிலையில் மீண்டும் தடைபட்ட சீரியல்கள் எல்லாம் தொடங்கப் போவதாக பிரபல டிவி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஊரடங்கு தளர்வுகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரியல் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. ஆனாலும், பல வெளியூர் நடிக – நடிகைகள் ஷூட்டிங்கில் கலந்துக் கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது
இதனால் பல சீரியல்களில் ஆட்கள் மாற்றப்பட்டுள்ளன. கூடவே, லாக்டவுன் காரணமாக பல சீரியல்கள் முடித்து வைக்கப்பட்டது. சிலவற்றில் இரண்டாம் பாகம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் புதுப்பொலிவோடு படப்பிடிப்பு தொடங்கி வெளியிடப் போகிறார்கள். நாயகி சீரியலில் இதுவரை நடித்து வந்த சிலரை இப்ப ப்ரோமோ வில் காணவில்லை. அதற்கு பதிலாக வேறு சிலர் வந்து இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் வரும் ஜூலை 27 ம் தேதி முதல் மௌனராகம், பாரதி கண்ணம்மா, ஆய்த எழுத்து, பாக்ய லட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் மீண்டும் புத்துணர்வுடன் புதிய பகுதிகள் ஒளிபரப்பப்படுவதாக புரமோ வெளியாகியுள்ளன.இதனால் சீரியல் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
Repeat ellam stopu!
Original ippo startu! #VijayOriginalsAreBack #VijayTelevision pic.twitter.com/Pudy7F6dpy— Vijay Television (@vijaytelevision) July 18, 2020
சன் டிவி மற்றும் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவர்ந்து வருகின்றன. விஜய் டிவியும் இதில் கொஞ்சமும் சளைத்தது அல்ல. இருந்தாலும் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் நேயர்களுக்கு சீரியல் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.
16 வயதில் திருமணம்.. 3 பெண் பிள்ளைகள்.. தன்னை தானே செதுக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்
இந்நிலையில் ஜூலை 27-ஆம் தேதி முதல் மீண்டும் தங்களது சேனல்களில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என அதிகாரபூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.