உடனே அவன் பிசினெஸ் மூளை அம்மாவுடன் கூட்டு சேர்ந்து வேகமா செயல்பட ஆரம்பிக்குது. பிசினெஸ் நொடிச்சு இருக்கும் சமயம் வேறு. மூளை மழுங்கி போயி எல்லாம் நடக்கறது தான்னு டேக் இட் ஈஸி பாலிசிக்கு வந்துட்டான். இல்லேன்னா அம்மா சொன்னாங்கன்னு காதலி பல்லவி இருக்க, சாக்லேட்ஸ் சுவீட்ஸ் பிசினெஸ் செய்ய ஃபார்முலா வேணும்னு இனியாவை காதலிக்கற மாதிரி நடிச்சு, கல்யாணம் வரை வருவங்களா? பிறகு கழட்டி விட்டுடறதாம். இதுக்கு காதலி பல்லவியும் முதலில் சம்மதம் தெரிவிக்கிறாள்.
Advertisment
Advertisements
கல்யாணம்தான் ஆச்சே தவிர அயோ பாவம் ஒண்ணுமே நடக்கலை விக்ரம் இனியாவுக்குள். ஆனால், காதலி பல்லவியின் கற்பனை குதிரை மிக வேகமா ஓடுது. விக்ரமும், இனியாவும் ரொம்ப ஜாலியா வாழக்கையை என்ஜாய் பண்ற மாதிரி கலர் கலர் கனவு. ஆனால், இவளுக்கு எல்லாமே கெட்ட கனவாச்சே.. சும்மா இருப்பாளா?
இனிமேலும் விக்ரமை விட்டுத் தருவதான்னு கிளம்பிட்டா.. அதாங்க இனியாவின் அப்பா அம்மாகிட்டே உண்மையை சொல்லி தன்னிடம் இருந்து விக்ரமை தட்டிப் பறிச்ச குடும்பத்துகிட்டே இருந்து. தான் விக்ரமை மீட்டு அடையணும்னு புறப்பட்டுட்டா பல்லவி. உண்மையை கேட்டதும் இனியா இனிப்பக குடும்பமே கொந்தளிச்சு போயிட்டாங்க. வீட்டுக்கு வந்து இனியாவின் அப்பா மாப்பிள்ளை சட்டையை பிடிச்சுட்டார். விவரத்தை கேட்ட பொண்ணு சொல்லு விக்ரம்.. அப்பா சொல்றது உண்மையா? நீ என்னை காதலிக்கற மாதிரி நடிச்சியான்னு இனியா கேட்க, விக்ரம் நல்ல பையனாச்சே, ஆமாம்னு சொன்னான். அவ்ளோதான் ஒரே அறை. என்னதான் ஏழைப் பெண் என்றாலும் ஏமாற்றம் பொதுதானே...!