மெட்டி ஒலி சாந்தி மாஸ் என்ட்ரி: எந்த சீரியல் தெரியுமா?

திருமணத்திற்கு பின், கணவன், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த சாந்தி, கண்ணான கண்ணே சீரியலில் நேற்று எண்ட்ரி கொடுத்துள்ளார்.

Metty Oli Santhi Appears in Sun Tv Serial : அப்பாவுக்கும் மகளுக்குமான உன்னத உறவையும், உணர்வையும் தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு அனுதினமும் அளித்து வருகிறது சன் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியல். குறைவான எபிசோடுகளே ஒளிபரப்பாகியிருக்கும் வேளையில், பல அதிரடி திருப்பங்களும், புதிய நடிகைகளின் அறிமுகமும் அரங்கேறி கொண்டிருக்கிறது. நேற்றைய முன் தினம் அபர்ணா ரோலில் அறிமுகமாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார் நடிகை சஹான ஷெட்டி. அதற்குள்ளாக அந்த சீரியலில், மெட்டி ஒலி புகழ் சாந்தியின் அறிமுகம் கண்ணான கண்ணே ரசிகர்கள் மட்டுமில்லாது, தமிழ் சீரியல் ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

‘கிழக்கு வாசல்’ திரைப்படத்தில் குரூப் டான்ஸர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை சாந்தி. தனது சகோதரி டான்ஸர் என்ற காரணத்தினால், நடன ஆசையில் 13 வயதில் நடனத் துறையி கால் பதித்தவர் சாந்தி. குடும்ப சூழலால், முறையாக டான்ஸ் பயிற்சி பெற்றுக் கொள்ள முடியாததால், ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சியை பார்த்து நடனம் ஆட தொடங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சுமார் 3000 பாடல்களுக்கு மேல் நடனமாடியுள்ளார் சாந்தி. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்தில் ‘நான் ஆட்டோகாரன்’ பாடலில் ஆடிய சாந்தி, அஜித், விஜய் என முன்னனி தமிழ் நடிகர்களுக்கு மிகவும் பரிட்சையமான டான்ஸர். கடந்த வருடம் படமாக்கப்பட்ட அரவிந்த் சாமியின் படத்தில் கூட வில்லியாக நடித்துள்ளாராம்.

2002-ம் ஆண்டு முதல் சன் டிவி யில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலின் டைட்டில் சாங்கான ‘அம்மி அம்மி அம்மி மிதித்து, அருந்ததி முகம் பார்த்து’ என்ற பாடலுக்கு சாந்தி நடனமாடும் விதம் படு ஜோராக இருக்கும். சாந்தியின் நடனத்துக்காவும், அந்த டைட்டில் சாங்குக்காவுமே அந்த நாடகத்தை பலர் தங்களின் ஃபேவரட் லிஸ்டுகளில் வைத்திருக்கும் 90-ஸ் ல்கிட்ஸ்கள் ஏராளம்.

மெட்டி ஒலிக்கு பின், எந்த சீரியலிலும் நடிக்காது இருந்தார் சாந்தி. சித்தி-2 ஒளிபரப்பாக தொடங்கிய போது, அதன் டைட்டில் சாங்கில் நடனமாட வாய்ப்பு கிடைத்த போதிலும், பழைய டைட்டில் சாங்கையே சித்தி டீம் பரிந்துரைத்ததால் அந்த வாய்ப்பும் பறிபோனது. திருமணத்திற்கு பின், கணவன், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த சாந்தி, கண்ணான கண்ணே சீரியலில் நேற்று எண்ட்ரி கொடுத்துள்ளார். 90-ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத டான்ஸ்ராக வலம் வந்த சாந்தியை மீண்டும், சன் டிவி யின் கண்ணான கண்ணே சீரியலில் பார்த்ததும், அதிர்ச்சியும் ஆனந்தமும் பெருக சீரியல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இருக்கும் சாந்தியின் செக்கண்ட் இன்னிங்க்ஸ் எப்படி இருக்கும்னு வரப் போற எபிசோட்கள்ல பார்ப்போம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv serial news dancer metty oli fame santhi appears in kannana kanne serial

Next Story
‘பாக்யா… என்ன இது? கோபி வர்ற நேரம் ஆச்சு!’ மாடர்ன் டிரஸ்- டான்ஸூக்கு ரசிகர்கள் ரியாக்சன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com