இந்த ரொமான்ஸ் நாயகி வாழ்வில் இப்படியும் சோகம்: தன்னம்பிக்கையால் ஜெயித்த பிரியங்கா

Sun tv serial roja actress priyanka, trending her engagement photos: காதல் தோல்வி, திருமணம் நின்று போனது என்று பல்வேறு கஷ்டங்கள் வந்தாலும் பிரியங்கா துவண்டு விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Sun tv serial roja actress priyanka, trending her engagement photos: காதல் தோல்வி, திருமணம் நின்று போனது என்று பல்வேறு கஷ்டங்கள் வந்தாலும் பிரியங்கா துவண்டு விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
இந்த ரொமான்ஸ் நாயகி வாழ்வில் இப்படியும் சோகம்: தன்னம்பிக்கையால் ஜெயித்த பிரியங்கா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள சீரியல் ரோஜா. டிஆர்பியிலும் இந்த சீரியல் முன்னிலையில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த ரோஜா சீரியலில் கதாநாயகியாக பிரியங்கா நடித்து வருகிறார். இவர் தீயா வேலை செய்யனும் குமாரு, காஞ்சனா 3 மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரலேகர், பூவே உனக்காக, லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ், அபியும் நானும் போன்ற சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Advertisment

பிரியங்கா தெலுங்கு சீரியல் நடிகர் ராகுல் என்பவரை சில வருடங்களுக்கு முன் காதலித்து வந்தார். இந்த நிலையில் நடிகை பிரியங்காவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ராகுலுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக பிரியங்கா தெரிவித்திருந்தார். இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காதல் தோல்வி, திருமணம் நின்று போனது என்று பல்வேறு கஷ்டங்கள் வந்தாலும் பிரியங்கா துவண்டு விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Priyanka Nalkari Roja Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: