Advertisment

ரோஜா கர்ப்பம்... ஷாக்கில் தலைதெறிக்க ஓடி வரும் அர்ஜூன்!

அத்தை கல்பனா வேற, புருஷனா நடிக்கும் அர்ஜுனுக்கு போன் பண்றாங்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Metti Oli Gayathri Shastry Lifestyle

ரோஜா சீரியலில்

sun tv serial roja: சன் டிவியின் ரோஜா சீரியல், அழுகை சோகம் என்று இல்லாமல், ஆரம்பத்தில் ஜாலியாகத்தான் இருந்து இருக்கிறது. ஆனாலும் பாருங்க...கதையில் கொலைகார வில்லி சாக்ஷி இருக்காங்க. மற்றபடி வசனம்..கதையின் போக்கு என்று நன்றாகவே இருக்கிறது. நாயகி ரோஜாவாக ஹைதராபாத் தெலுகு பெண் பிரியங்கா, நாயகன் அர்ஜூனாக அதே ஹைதராபாத் சிபுசோரன் நடித்து இருக்கார். பிரியங்கா, சிபு இருவரும் தமிழகத்தில் நிறைய ரசிகர்களை ரோஜா சீரியல் மூலம் கவர்ந்து இருக்கிறார்கள்.

Advertisment

கிரிமினல் லாயர் அர்ஜுனுக்கு கல்யாணம் பிடிக்காது.. வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் செய்துவிட, அதில் இருந்து எஸ்கேப் ஆக, தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிரியமானவளே பாணியில், ஒரு வருட கான்டிராக்ட் மேரேஜ் செய்துக்கறான். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசம்...வெறும் புருஷன் பொண்டாட்டியாக நடிக்க மட்டுமே... என்ன இந்த நடிப்பு கொஞ்சம் ஓவரா போய்க்கொண்டே இருக்கிறது. வீட்டினரை நம்ப வைக்க அடிக்கடி ரோஜாவை தூக்கி தூக்கி வச்சுக்கிட்டு, ஒரு நாளைக்கு 3 ஷோவை அர்ஜுன் தவறாமல் ஓட்டிடறான்.

இப்படி இருக்கும்போது திடீர்னு பார்த்தால், ரோஜா வாந்தி எடுக்கிறாள். சமையல்கார சுமதிம்மா, டாக்டர் கணக்கா நாடியை புடிச்சு பார்த்து, ரெட்டை நாடி துடிக்குது...ரோஜா உண்டாகி இருக்குன்னு சொல்லிடறாங்க. என்னது...ஒரு காதல் இல்லை...ஒரு முதலிரவு இல்லை..அதற்குள் பேபி ஃபார்மா.. பெருங்குழப்பத்தில் ரோஜா தத்தளிக்கிறாள். அதற்குள் வீடே அல்லோகலப் பட்டுடுது.மெதுவாக அத்தை கல்பனாவிடம் அத்தை டாக்டர் சொல்லட்டும் அத்தை என்று ரோஜா சொல்ல, உடனே அங்கும் கிளம்பியாச்சு.

என்ன மாயமோ.. மந்திரமோ.. டாக்டரும் கன்ஃபார்ம்னு சொல்லிட்டாங்க. அத்தை கல்பனா வேற, புருஷனா நடிக்கும் அர்ஜுனுக்கு போன் பண்றாங்க. பதட்டத்தில் அர்ஜுன் ஒரு சந்தோஷமான விஷயம் அர்ஜூன்.. நீ அம்மாவாகப் போறேன்னு சொல்ல, என்னம்மா நான் எப்படின்னு கேட்கிறான் அவன். சாரி சாரிடா...நீ அப்பாவாகப் போறே என்று மீண்டும் சொல்றாங்க. ரோஜாவுக்கு புருஷனா நடிக்கும் அர்ஜுன் மீண்டும் அம்மா நான் எப்படி அப்பா என்று கேட்டால் அடிதான் விழும்...சரி, அவங்களோட சேர்ந்து நாமும் நடிக்கலாம் என்று சுவீட்டோடு வீட்டுக்கு போறான். இதை பார்த்த ரோஜா, இருந்தாலும் அர்ஜுன் சாருக்கு ரொம்ப கிண்டல்தான் என்று நினைச்சுக்கறா, அவன் ஆசையா பொண்டாட்டிக்கிட்டே போற மாதிரி போக, இடை மறிக்கும் அர்ஜுன் அம்மா சொல்றாங்க.. இதோ பாரு அர்ஜுன், முன்னே மாதிரி ரோஜாவை பொசுக்கு பொசுக்குன்னு நீ தூக்கிக்க முடியாது.. அடக்கி வாசி சரியான்னு கேட்கறாங்க... அம்மா நன் அதுக்குத்தான் ரோஜா கிட்டே போனேன் என்று அர்ஜுன் பாவமாக சொல்ல, சகிச்சுக்க முடியாத ரோஜா மாடிக்கு போயிட்டா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment