Sun TV serial: அனுவை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வருவேன்… அன்னபூரணி சபதம்

Sun TV Roja serial today episode Anu will taken from jail annapoorani vowed : ஜெயில் இருக்கும் அனுவை வெளியில் கொண்டு வர சபதம் செய்யும் அன்னபூரணி, சாந்தி முகூர்த்தத்திற்கு தயாராகும் அர்ஜூன் ரோஜா இன்றைய எபிஷோடில்…

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

சிறையில் இருக்கும் அனுவை பார்க்க அன்னபூரணி வந்திருப்பதாக வார்டன் அனுவிடம் சொல்கிறார். அனு பாட்டியை பார்க்க சங்கடப்படும் அனு இப்போது பார்க்க வேண்டாம் என மறுக்க, உங்க அப்பா டைகர் மாணிக்கம் தான் ஏற்பாடு பண்ணியிருக்கார் நீ வந்து, உங்க பாட்டிக்கிட்ட பேசு என அழைத்து செல்கிறார் வார்டன். சிறையில் அனுவின் நிலையைப் பார்த்து கவலைப்படுகிறாள் அன்னபூரணி.

நீ ஏன் இங்க வந்தீங்க என அனு பாட்டியிடம் கேட்க, உன்ன பாக்கனும் போல இருந்துச்சு அதான் வந்தேன் என சொல்கிறாள் அன்னபூரணி. மேலும் முகத்தை மறைத்து நிற்கும் அனுவிடம், உன் முகத்தை பார்க்கதான் வந்தேன் முகத்தை காட்டு என சொல்கிறாள். அனு காயங்கள் உள்ள தனது முகத்தை காட்ட பதறிப்போகும் பாட்டி, என்ன நடந்து என கேட்கிறாள். பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக பொய் சொல்லும் அனுவிடம் உண்மை என்ன என விடாப்பிடியாக கேட்கிறாள் பாட்டி. அதற்கு அனு அத விடுங்க, நீங்க என்ன கடைசியா உயிரோடு பாக்குறது இதுவாதான் இருக்கும் என கூற அதிர்ச்சியாகிறாள் பாட்டி.

இந்த ஜெயில்ல எனக்கு எது வேணா நடக்கலாம், எனக்கும் அந்த கொலை கேஸூக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அர்ஜூன் என்னை நல்ல மாட்டிவிட்டுட்டான் என அனு கூற, பாட்டியோ எல்லாத்துக்கும் அந்த ரோஜாதான் காரணம் என்கிறாள். பின்னர் அனு தான் இந்த ஜெயிலிலே சாக போவதாகவும், அதனால் நீங்க என்ன மறந்துருங்க என கூறுகிறாள். அதைக் கேட்டு பாட்டி துடித்து போகிறாள். உன்ன சாக விடமாட்டேன் என சமாதானம் செய்கிறாள். ஆனால் அனுவோ அர்ஜூன் என்ன விடமாட்டாரு, இங்க சாக்ஷியை எனக்கு எதிரா தூண்டி விடுறார் என சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வருகிறாள் சாக்‌ஷி.

அனுவை ஏன் பழிவாங்குற என சாக்‌ஷியிடம் கோபமாக கேட்கிறாள் பாட்டி. அதற்கு சாக்‌ஷியோ அனுவ கடைசியா ஒரு தடவை பாத்துங்கோங்க எனக் கூறிவிட்டு செல்ல அதிர்ச்சியாகிறாள் பாட்டி. அர்ஜூன் தான் இதுக்கு காரணம் என அர்ஜூன் மீது குற்றம் சொல்கிறாள் அனு. அதற்கு பாட்டி அர்ஜூனை வைத்தே உன்னை வெளிய கொண்டு வர்றேன் என சபதம் செய்கிறாள்.

அடுத்ததாக, கல்பனா சின்சியராக வேலை செய்து கொண்டிருக்கும் பிரதாப்பிடம், காபியை கொடுத்தவாறே அர்ஜூன், ரோஜாவின் சாந்தி முகூர்த்தை பற்றி பேசுகிறாள். இதனை அர்ஜூன், ரோஜா மற்றும் அன்னபூரணி மறைந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு அர்ஜூன் ஆசையாக ரோஜாவை கொஞ்சுகிறான். கல்பனா ஐயருக்கு போன் செய்து சீக்கிரம் நாள் குறிங்க என அவசரப்படுத்துகிறாள். அப்போது அங்கு வரும் பாலு, வீட்ல ஒரு பிரச்சனை இருக்குற நேரத்துல இப்ப தேவையா என கேட்கிறான். அர்ஜூன் இவன் என்ன குட்டை குழப்புறான் என டென்ஷன் ஆகிறான்.

அப்போது பாலு அனு என்ன இருந்தாலும் நம்ம வீட்டு பொண்ணுதானே, ஒரு சின்ன தப்பு பண்ணிட்ட அதுக்காக அவள ஜெயில்ல போட்டதெல்லாம் சரியில்லை என சொல்கிறான். கல்பனாவோ அனுவுக்கும் இந்த வீட்டுக்கு சம்பந்தம் இல்லை என்கிறாள். அப்போது அங்கு வரும் அர்ஜூன், பாலுவிடம் அனு இந்த வீட்டு பொண்ணுனு உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறான். அப்போது அன்னபூரணி ஜெயில் எடுத்த சபதத்தை நினைத்து பார்த்து, அர்ஜூன் ரோஜாவை கைக்குள் போட திட்டம் தீட்டுகிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv serial roja today episode anu will taken from jail annapoorani vowed

Next Story
ரஜினிக்கு ஜூஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தின் மகள் ; பல ஆணடுகளுக்கு பின் வெளியான தகவல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express